மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் டிரைவர் பணிவாய்ப்பு! – AanthaiReporter.Com

மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் டிரைவர் பணிவாய்ப்பு!

இந்திய அரசின் முக்கியமான அமைச்சரவைகளில் வெளியுறவு அமைச்சகம் எனப்படும் எக்ஸ்டர் னல் அபெயர்ஸ் மினிஸ்ட்ரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் பன்னாட்டு உறவு கள், அன்னியச் செலாவணி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங் களில் இந்த அமைச்சகத்தின் முடிவுகளே முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக மாறுகின்றன. இந்த அமைச்சகத்தில் ஸ்டாப் கார் டிரைவர் பிரிவில் காலியாக இருக்கும் 4 கிரேடுகளிலான 67 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : கிரேடு 1 பிரிவில் 30ம், கிரேடு 2 பிரிவில் 29ம், கிரேடு 3 பிரிவில் 3ம், ஸ்பெஷல் கிரேடு பிரிவில் 5ம் சேர்த்து மொத்தம் 67 இடங்கள் உள்ளன.

தேவைகள் என்ன: செல்லத்தக்க ஓட்டுனர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். மோட்டார் காரின் மெக்கானிசம் தெரிந்தவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் மூன்று வருட காலத்திற்கு கார் ஓட்டிய அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மூன்று வருட காலத்திற்கு சிவில் வாலன்டியராக ஹோம் கார்டாகப் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

விண்ணப்பிக்க 
: கீழே கொடுக்கப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் முழுமை யான விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

[email protected]

கடைசி நாள் : 2018 டிச., 10.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு