பள்ளி பருவத்திலுள்ள உங்கள் குழந்தை அடிக்கடி பல்லை கடிக்கும் பழக்கம் உள்ளதா? பீ கேர்ஃபுல்! – AanthaiReporter.Com

பள்ளி பருவத்திலுள்ள உங்கள் குழந்தை அடிக்கடி பல்லை கடிக்கும் பழக்கம் உள்ளதா? பீ கேர்ஃபுல்!

குழந்தைகளுக்கு இருமுறை தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம் வரும். ஒன்று, அவர்கள் மிகவும் சிறு குழந்தைகளாக இருக்கும் போது. மற்றொன்று, அவர்களுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது. ஆனால் இது நிரந்தரம் கிடையாது. அவ்வப்போது லேசாகத் தலைவலி வரும், தாடைகள் வலிக்கும், சிலருக்கு தெத்துப் பல் வரும். இன்னும் சில குழந்தைகள் வளர்ந்த பிறகும், இந்தப் பழக்கம் தொத்திக் கொண்டிருக்கும். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியாமல் இருந்தது. இதனிடையே பதின்ம வயதினரிடையே பற்களை கடிக்கும் பழக்கம் அவர்கள் பள்ளிக்கூடங்க ளில் கேலிக்கு உள்ளாவதற்கான அறிகுறி என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மன அழுத்தம் மற்றும் சோகத்துக்கு ஆளான பெரியவர்களையும் இது பாதிக்கும் என்பதால், பெற்றோரும் பள்ளிகளும் இதுகுறித்து விழிப்பு ணர்வுடன் இருக்க வேண்டும் என்று வாய் தொடர்புடைய சுகாதாரத்திற்கான ஒரு தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

பற்களை கடித்தல், தலைவலி, பல் தேய்மானம் மற்றும் தூக்க குறைபாடுகள் உள்ளிட்டவற்றை உண்டாக்கும் என்றும், இவை அதிகரித்து வருவதாகவும் வல்லுனர்கள் கூறுகின்றனர். நறுக்கும் சத்தத்தை வட்ட வடிவ ரம்பத்தின் சத்தத்துடன் ஒப்பிடலாம். பள்ளிகளில் கேலிக்கு ஆளாகும் 13 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்கள், பிறரைவிட நான்கு மடங்கு அதிகமாக இரவில் பற்களை கடிக்கும் பழக்கத்திற்கு உள்ளாக வாய்ப்புண்டு என்று ஜோர்னல் ஆப் ஓரல் ரீஹேபிலியேஷனில் (Journal of Oral Rehabilitation) வெளியாகியுள்ள ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. பிற மாணவர்களில் 17 சதவீதத்தினரிடையே மட்டும் அப்பழக்கம் உள்ள நிலையில் கேலிக்கு உள்ளாவோரிடையே இது 65 சதவீதமாக உள்ளதாம்.

ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இதற்கு திறன்மிகுந்த சிகிச்சைகள் உள்ளன.கார்டு (Guard) அல்லது ஸ்ப்ளின்ட் (Splint) எனப்படும் கடினமான பிளாஸ்டிக் உபகரணத்தைப் பற்களில் பொருத்துவதன் மூலம், பல் கடிப்பதைத் தடுக்க முடியும். பற்கள் ஒன்றன் மேல் ஒன்று நன்றாகக் பொருந்த வைப்பதே இதன் நோக்கம். இந்த உபகரணத்தைப் பொருத்துவதால் மெல்லுவது இலகுவாகி பற்கள் பாதுகாக்கப்படும்.அது மட்டுமின்றி புகைப் பழக்கத்தைக் கைவிடுதல், மது உட்கொள்வதைக் குறைத்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களும் இப்பிரச்சனைத் தீர்க்கப் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதனிடையே உறக்கத்தின்போது மூச்சுத் திணறல், கடுமையாகக் குறட்டை விடுதல் உள்ளிட்ட தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் பற்களை கடிக்கும் பழக்கத்தை உண்டாக்கும்.பிரிட்டனில் மட்டும் உறக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கம் 60 லட்சம் பேரைப் பாதிக்கலாம் என்று கார்ட்டர் மதிப்பிடுகிறார்.நம் வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மன அழுத்தம் இருந்தால், நாம் அவற்றை நம் பற்களுக்கு எடுத்துச் செல்கிறோம் என்பதில் வியப்பேதுமில்லை. பகல் நேரங்களில் நம் வீட்டு வேலைகள் மற்றும் நாமாகச் செய்து கொள்ளும் பணிகள், வாகனம் ஓட்டுதல், நாம் மிகுந்த அக்கறை கொள்ளும் பணிகள் உள்ளிட்டவற்றால் பற்களை கடிக்கறோம்