உங்க மாத்திரையிலே சிவப்பு கோடு இருக்கா? – AanthaiReporter.Com

உங்க மாத்திரையிலே சிவப்பு கோடு இருக்கா?

வழக்கமாக நாம் உட்கொள்ளும் மருந்துகளின் பட்டைகளில் புதுசா ஒரு இரண்டு – ஆறு மாதமாக பல மாத்திரைகளில் சிவப்பு கோடு ஒன்று புதுசாக காண்பதை ஒவ்வொரு ஆட்களும் ஒவ்வொரு விதமாக திரித்து கூறும் உண்மை காரணம் தான் என்ன?

ravi may 8

2016 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் சுகாதாரத்துறை ஷெக்டியூள் ஹெச் என்னும் மருந்துகளை அடையாளபடுத்துவதற்க்கு இனிமேல் இந்த சிவப்பு பட்டை 5 மில்லி மீட்டர் அளவுக்கு அச்சிடப்பட வேண்டும் என்பது விதி என்று கூறியவுடன் இந்திய மருத்து தயாரிப்பு நிறுவனங்கள் இதற்க்கு எதிர்ப்பு காட்டியது அதற்க்கு என்ன காரணம் என்பதே இந்த விளக்கவுரை……

ஒரு காலத்தில் மருந்தகத்தில் நாம் பார்த்திருப்போம்…. “scheduled drug” என்னும் தனிபகுதி இருக்கும் அதில் இருக்கும் மருந்துகளை வாங்க வேண்டுமெனில் ப்ரிஸ்கிரிப்ஸன் வேண்டும் மற்றும் என்ன அளவு என்பதை கூட மருந்து சீட்டின் குறிப்பை மேட்ச் செய்தே தருவார்கள். இப்போது அது மெல்ல மறைந்து யாருக்கு எந்த மருந்து வேணுமோ அதை கன்டமாறிக்கு கொடுக்க துணிந்தனர். 3 வருஷமாக இந்த மாத்திரை தான் சாப்பிடுறேன் ஆனா ஃபோன் பண்ணி சொன்னா டக்கென்று கொண்டு வந்திருவாங்கன்னு “scheduled drug” மருந்துகள் எளிதாக‌ கிடைப்பதால் பல பேர் இதை மிஸ் யூஸ் செய்கின்றனர். ஆன்டிபயாடிக் வகை தான் இதில் முக்கியம். போன வருஷன் ஜூரம் வந்த போது இதை தான் சாப்பிட்டேன் என்று இந்த வருஷ ஜுரத்துக்கும் அதே ஆன்டிபயாடிக் டாக்டரிடம் செல்லாமல் சாப்பிடுவதும் பழக்கமே..

இனிமேல் சிவப்பு குறியீட்டை கொண்ட ரெகுலர் மாத்திரைகளான ரத்த கொதிப்பு / டயாபடிக் / தைராயிட் மாத்திரகளை நீங்கள் பல ஆண்டுகள் உங்கள் வாழ்வோடு உண்டு வந்தாலும் இனிமேல் டாக்டரிடம் 3 – அல்லது 6 மாதத்திற்கு ஒரு புது சீட்டு வாங்கி வாங்குவதுதான் சிறந்தது. இது இனிமே மெடிக்கல் ஸ்டோர்களும் கண்டிப்பாக ஒரு வருடத்திற்குள் நடைமுறைக்கு கொண்டு வராங்க.

பல பேர் இதில் சிவப்பு பட்டை இருக்கு இது ரொம்ப டேஞ்சர் மாத்திரைனு கவர்மென்ட்டே போட்டிருக்குனு ரெகுலரா சாப்பிடறவங்களை காபரா படுத்துவது உண்மைக்கு புறம்பானது.

அதனால் சிவப்பு கோடு கொண்ட மாத்திரைகளை சாப்பிடும் முன் யோசியுங்கள் அது இனிமேல் ஜெனரிக் மெடிசன் அல்ல.

அதனால் முடிந்த அளவுக்கு இந்த சிவப்பு குறீயிட்டின் முக்கியதூவத்தை பரப்புங்கள்……… அதே போல மெடிக்கல் ஸ்டோர்ல ரெடிமேடு டாக்டர் கணக்கா மாத்திரைகளை உங்கள் நோயின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கும் போது சிவப்பு லைன் இருந்தால் உட்கொள்வதை தவிர்க்கவும். ஜெனரிக் மெடிசனுக்கு இது இல்லை.