இஸ்ரேல் நாட்டை பற்றி இந்த விஷயங்களெல்லாம் தெரியுமோ? – AanthaiReporter.Com

இஸ்ரேல் நாட்டை பற்றி இந்த விஷயங்களெல்லாம் தெரியுமோ?

இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 25 –இஸ்ரேல் – இந்த புகைப்படத்தையும் இந்த நாட்டின் பெயரையும் கேட்ட மாத்திரத்தில் நிறைய பேருக்கு ஒரு வெறுப்பு வரும் அதனால் என்ன – இந்த நாட்டுக்கு பெரிய வரலாறு எல்லாம் இல்லை – இந்தியாவுக்கு அப்புறம் சுதந்திரம் அடைந்த இந்த நாடு இன்றூ உலகத்தின் இரண்டாவது அதிக பெர் கேப்பிட்டா ஜிடிபி மட்டும் அல்ல பல முண்ணனி நாடுகளான – அமெரிக்கா – சிங்கப்பூர் என்று இன்றும் பல நாடுகளின் உளவுத்துறை முதல் ராணுவ தளவாடங்கள் வரை நெ 1 நாடு இஸ்ரேல். உலகத்திலே அதிக பட்டதாரிகள் கொண்ட நாடும் இஸ்ரேல் தான். உலகத்தின் அதிக பெண் வழக்கறிஞர்களை கொண்ட நாடும் இஸ்ரேல் தான்.

இன்ஸ்டன்ட் மெசேஞ்ர் / ஆன்டி வைரைஸ் . வாய்ஸ்மெயில் என்னும் பல உலக முன்னணி கண்டுபிடிப்புகளும் இந்த நாட்டில் இருந்து தான் உருவாகியது. உலகத்தில் அதிக மொழி பதிப்புகளை தன் மொழிக்கு மொழி பெயற்த்த நாடுகளில் முதல் இடம் இஸ்ரேலுக்குத்தான். மைக்ரோசாஃப்ட் இஸ்ரேலில் தான் உலகத்திலே அதிக பணி யாளர்களை அமர்த்தி இருக்கிறது. இஸ்ரேலில் 10ல் 9 வீடு – சூரிய ஒளியான சோலார் முறையில் தான் சுடு தண்ணீர் உட்பட மின்சார தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது. 18 வயதில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் மூன்று வருடம் கட்டாய் ராணுவ பணிக்கு செல்ல வேண்டும். உலகத்திலே அதிகம் ராணுவ செலவுக்கு செலவு செய்யும் ஒரே நாடு இஸ்ரேல்.

சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிரி நாடு என கூறினாலும் இங்கே இந்தியாவை விட 17.2% இஸ்லாமியர்களும் 25% வரை மாற்று மதத்தினர் வசிக்கும் நாடு இஸ்ரேல். அரபிக் மொழி கூட அதிகார மொழி இஸ்ரேலில்.இந்த நாட்டின் உறவே மலேஷியாவில் வேலை செய்யும் போது அந்த நாட்டினரின் பாஸ்போர்ட்டிலே இருக்கும் மலேஷிய பிரஜை எந்த நாட்டுக்கும் செல்ல முடியும் இஸ்ரேலை தவிர என்று இருந்த காலத்தில் எனக்கு அன்று ஆரம்பித்த வாய்ப்பு இந்த இஸ்ரேல் தொடர்பு இன்னும் என்னை பிரமிப்பில் ஆழத்த தவறிய நாட்களே இல்லை………………மொத்ததில் இஸ்ரேலின் மூளை இந்த நூற்றான்டில் சிறந்தது என்று நான் மட்டும் அல்ல உலகத்தின் அனைத்து நாடுகளும் ஒத்து கொள்ளும் ஒரு பெரிய உண்மை.

PS – என்னுடைய சில வேலைகள் அரசாங்க சம்பந்தபட்ட விஷயமென்பதால் பல தருணங்களில் எவ்வளவு தெரிந்தவர்கள் என்னை அழுத்தி கேட்டாலும் நான் எந்த நாட்டில் இருக்கிறேன் அடுத்து எங்கு செல்கிறேன் என்பது சொல்ல இயலாமல் போய் விடுகின்றது. மிக மிக சிலருக்கு மட்டும் என் வேலை விஷயங்கள் நன்கு தெரியும் So No Kolaveri pls. அடுத்த வாரம் இன்னும் ஒரு ஆச்சர்ய விஷயத்தோடு……………………ஹாப்பி கோவிந்தா கோவிந்தா டே