குழந்தைகளின் பிறப்பில் சந்தேகம்! – டி என் ஏ டெஸ்ட் எடுக்கும் அப்பாக்கள்! – இந்திய அதிர்ச்சி

குழந்தைகளின் பிறப்பில் சந்தேகம்! – டி என் ஏ டெஸ்ட் எடுக்கும் அப்பாக்கள்! – இந்திய அதிர்ச்சி

குழந்தைகளின் பிறப்பில் ஏற்படும் சந்தேகம் காரணமாக உண்மை தந்தையை அறிய “தந்தைவழி மரபு சோதனை” நடத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக ரூ.10,000 மாக இருந்த சோதனை கட்டணம் ரூ.19,000 மாக அதிகரித்துள்ளது.

 dna may 25

கணவன் – மனைவி இடையே நடத்தையில் சந்தேகப்படும் சம்பவங்கள் நகரில் பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதன் காரணமாக உண்மை தந்தையை கண்டறிய “டி என் ஏ” போன்ற “தந்தை வழி மரபு” பரிசோதனை செய்ய வருபவர்ளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக கலீனாவில் உள்ள “தடயவியல் விஞ்ஞான சோதனை” கூடத்தின் (எப் எஸ் எல்) அதிகாரிகள் தெரிவித்தனர். எப் எஸ் எல் சேகரித்துள்ள புள்ளிவிவரத்தின்படி கடந்த 2014 ல் 115 ஆக இருந்த தந்தைவழிமரபு சோதனை 2015 ல் 135 ஆக அதிகரித்துள்ளது. கொலை, பலாத்காரம் மற்றும் ஆள்கடத்தல் போன்ற குற்றங்களை கண்டுபிடிக்க மட்டும் இதுபோன்ற சோதனைகளை எப் எஸ் எஸ் செய்து வருகிறது. இப்போது இது போன்ற மரபு சோதனைக்கும் மக்கள் படை எடுப்பதால் சோதனை கூடத்தின் பணிகள் அதிகரித்துள்ளது.

தந்தைவழி மரபு சோதனைக்காக மாதம் 11 க்கும் அதிகமானவர்கள் வருகின்றனர். இந்த எண்ணிக்ககை மாதத்துக்கு மாதம் அதிகரித்து வருகிறது என அந்த சோதனை கூடத்தின் அதிகாரி வியப்பு தெரிவித்தார்.இது ேபான்ற சோதனைக்கு ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணம் இப்போது ரூ.19,000 மாக அதிகரித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் விலை அதிகமாகிறது. அத்துடன் சோதனை செய்யும் நிபுணர்களின் சம்பளமும் அதிகமாகிறது எனவும் அந்த அதிகாரி கூறினார்.

காவல் துறைக்கு இதுபோன்ற சோதனைகளை இலவசமாக செய்து கொடுக்கிறோம். அவர்களின் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுவதால் கட்டணம் வசூலிப்பதில்லை. தனியாரிடம் இருந்து இதுபோன்ற சோதனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் புனே, நாக்பூர் மற்றும் அவுரங்காபாத்தில் கிளைகள் அமைக்கவிருக்கிறோம் என இன்னொரு அதிகாரி தெரிவித்தார். இது போன்ற சோதனைக்கு வருபவர்களில் பெரும்பான்மையினர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் சோதனை கட்டணத்தை தரவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பாலியல் தொடர்பான விழிப்புணர்வே இதற்கு காரணம். ராஜஸ்தானைச் சேர்ந்த பெரிய பணக்காரர் ஒருவர் இது போன்ற சோதனைக்காக மும்பை வந்தார். அவருக்கு 5 குழந்தைகள். அந்த குழந்தைகள் அனைவர் மீதும் அவருக்கு சந்தேகம். சோதனையில் அவர்தான் உண்மை தந்தை என்பது உறுதியானது. அதன்பின் அவர் நிம்மிதியுடன் சென்றார். இது போன்ற பல சம்பவங்கள் நடப்பதாக ஹேலிக் என்ற அமைப்பின் ஸ்தாபகர் டாக்டர் ருக்மினி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

error: Content is protected !!