தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்பு கொடியா? – ஸ்டாலின் யோசனை!

தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்பு கொடியா? – ஸ்டாலின் யோசனை!

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வியாழக்கிழமை (இன்று) முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்ததால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்றன.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, அண்ணா சமாதி வரை பேரணியாகச் சென்று கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரைப் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர், ”இந்தப் போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருக்கிறது. ஆனால், ஒரு சிலர், குறிப்பாக சில ஊடகங்கள் ஆங்காங்கே கலவரம் நடைபெற்றது போல வேண்டுமென்றே ஒரு வதந்தியை திட்டமிட்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை.” என்றார்.

பிரதமர் மோடி, தமிழகம் வரும்போது கறுப்பு கொடி காட்டும் போராட்டம் குறித்து, வெள்ளிக்கிழமை (நாளை) நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், அதை எந்தவிதத்தில் செயல்படுத்துவது என விவாதித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!