காங்கிரஸூக்கு புதுவையும் சேர்த்து 10 தொகுதிகள்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

காங்கிரஸூக்கு புதுவையும் சேர்த்து 10 தொகுதிகள்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வரும் பார்லிமெண்ட் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 ம் புதுச்சேரி1மாக மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பார்லிமெண்ட் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதி யானது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகளும், பாமகவிற்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் நேற்று திமுக எம்பி கனிமொழி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் தமிழகத்தில் 9 மற்றும் புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 10 தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது. அது உறுதி செய்யப்பட்டதாகவும், இன்று ஸ்டாலின் அதை அறிவிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தமிழக நிர்வாகிகள் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் ஒரு மரியாதை நிமித்தமாக பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக இரண்டு மணி நேரம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் பேச்சுவார்த்தை நீடித்ததாக கூறப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் தலைவர்களிடையே மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆலோசனை நடத்தினார்.

அதில் சரியான உடன்பாடு எட்டாத நிலையிலும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர். அதன்பின்னர், காங்கிரஸ் தலைவர்களும் அறிவாலயம் வந்தனர். அங்கும் ஜஸ்ட் ஃபார்மாலிட்டியாக பேச்சுவார்த்தை நடந்த பின்னர் தொகுதிப் பங்கீடு அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, காங்கிர ஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் ஒரு தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், ‘எந்தெந்தத் தொகுதிப் வ்கள் என்பது கூட்டணிக் கட்சிகளை அழைத்து முடிவுசெய்து அறிவிக்கப்படும். கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்தளித்த பின்னர், மீதமுள்ள தொகுதிகளில் தி.மு.க போட்டியிடும். தேமுதிக வுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை.. அதிலும் ஓட்டலில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தாமல், வெளிப்படையாக கூட்டணிகுறித்து அறிவித்துள்ளோம்.. அதிமுக, பாஜக, பாமகவின் கூட்டணி மக்கள் நல கூட்டணி அல்ல, பண நல கூட்டணி..’’என்றார்.

error: Content is protected !!