விஜய்காந்த் வரப் போறார்! – ஆனால்..?!

விஜய்காந்த் வரப் போறார்! – ஆனால்..?!

அரசியலிலும் தனி ஒருவனாய் இறங்கி அசூர பலத்துடன் வளர்ந்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் (பிப்.16) சென்னை திரும்புகிறார் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில வருடங்களாக உடல் பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவருக்குப் பல்வேறு சிகிச்சை அளிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் விஜயகாந்த் உடல் நலம் தேறி, புதிய உத்வேகத் துடன் அரசியலில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் (பிப்.16) சென்னை திரும்புகிறார் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மேல் சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற்ற நிலையில் நாளை மறுநாள் சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தேமுதிக சார்பில் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் சென்னைக்கு வந்த பின் மீண்டும் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக இருப்பார் என்றும் ஒரு தரப்பினர் எதிர்பார்த்தாலும் அவர் அரசியலில் இனி நேரடியாக களம் இறங்க வாய்ப்பில்லை என்று ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக வரும் பார்லிமெண்ட் தேர்தலில் விஜயகாந்த் மச்சான் சுதிஷூக்கு மட்டும் ஒரு சீட் வாங்கி விட்டதாக வரும் தகவலால் தேமுதிக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதையெல்லாம் கேப்பட்ன் கவனத்துக்கு கொண்டு செல்ல வழியே கிடையாது என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம். அதனால் விஜயகாந்த் சென்னை திரும்பியதும் தேமுதிக கூடாரத்தில் வெற்றிடம் அதிகமாகும் என்கிறார்கள்..

இன்னும் இரண்டு நாள்தேனே.. பார்ப்போம்!

error: Content is protected !!