சட்டக் கல்லுாரியில் உதவி பேராசிரியர் வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com

சட்டக் கல்லுாரியில் உதவி பேராசிரியர் வேலை வாய்ப்பு!

தமிழகத்தின் அரசு கல்லுாரி களில் ஏற்படும் ஆசிரியர் பணியிடங்களை டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சட்டக் கல்லுாரியில் உள்ள 186 உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள்:
 அசிஸ்டென்ட் புரொபசர் காலியிடங்கள் லா மற்றும் பிரீ -லா என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது.

வயது : 2018 ஜூலை 1 அடிப்படையில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இடஒதுக்கீடு உள்ளவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: மேற்கண்ட இரண்டு பிரிவுகளுக்குமே குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பை சட்ட பிரிவில் முடித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் மதிப்பெண்ணை பொறுத்தவரை ஆராய்ச்சி படிப்பு, இடஒதுக்கீடு ஆகிய அடிப்படையில் சில சலுகைகள் உள்ளது. இத்துடன் நெட் தேர்வு, சிலெட் தேர்வு மதிப்பெண்களும் தேவைப்படும். சரியான தகவல்களை இணையத்தில் பார்த்த பின்னர் உறுதி செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600.

கடைசி நாள்
: 2018 ஆக., 6

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு