ரிசர்வ் பேங்க்-கில் ஜாப் ரெடி!

ரிசர்வ் பேங்க்-கில் ஜாப் ரெடி!

நம் நாட்டின் வங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், நிதி தொடர்பான முக்கிய விஷயங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தல் மற்றும் செயல்படுத்தும் அமைப்பாகவும் பாரத ரிசர்வ் வங்கி திகழ்கிறது. இதில் தற்போது ஸ்பெஷலிஸ்ட் கிரேடு பி பிரிவில் காலியாக இருக்கும் 60 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: பினான்ஸ் மற்றும் டேடா அனலிடிக்ஸில் தலா 14, ரிஸ்க் மாடலிங் மற்றும் பாரன்சிக் ஆடிட்டில் தலா 12, புரொபஷனல் காபி எடிட்டிங் மற்றும், எச்.ஆர்.,ல் தலா 4ம் சேர்த்து மொத்தம் 60 இடங்கள் உள்ளன.

தேவைகள் என்ன: பினான்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ., எம்.ஏ., பொருளாதாரம், எம்.காம்., பி.ஜி.டி.எம்., போன்ற படிப்பு தேவை. டேடா அனலிடிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ., பினான்ஸ், எம்.ஸ்டாட் டிஸ்டிக்ஸ், தேவை. ரிஸ்க் மாடலிங்கிற்கும் எம்.பி.ஏ., பினான்ஸ் தேவை. பாரன்சிக் ஆடிட்டிற்கு சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., தேவை. புரொபஷனல் காபி எடிட்டிங்கிற்கு எம்.ஏ., ஆங்கிலம் தேவை. எச்.ஆர்., பிரிவுக்கு இப்பிரிவில் முதுநிலைப் படிப்பு தேவை. முழுமையான விபரங்களை இணையத்தில் காணவும்.

தேர்ச்சி முறை: தாள் 1, தாள் 2, தாள் 3 என்று மூன்று நிலையிலான தேர்வுகள் மூலம் தேர்ச்சி இருக்கும். இவற்றில் முதல் இரண்டு தாள்களை ஆன்லைன் முறையிலும் மூன்றாவது தாளை டெஸ்கிரிப்டிவ் வகையிலும் எழுத வேண்டும்.

தேர்வு மையங்கள்: தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர முக்கிய மையங்கள் ஏதாவது ஒன்றில் எழுதலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2018 செப்., 7.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!