எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி!

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத்துறையில் தனிப் பெரும் சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் கிளை அங்கமாகத் திகழ்வதும், வீட்டுக்கடன் வழங்குவதில் அத்துறையில் தனிப்பெரும் சாதனை களை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது.  இதில் மார்க்கெட்டிங் தொடர்புடைய டைரக்ட் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஸ்டைபண்டுடன் கூடிய மார்க்கெட்டிங் பணி என்பதும், வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் சந்தை என்பதும் கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

 

வயது: 2018 ஏப்., 30 அடிப்படையில் 21 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும்.

இதர தகுதி: எம்.பி.ஏ., படிப்பை மார்க்கெட்டிங் அல்லது நிதிப்பிரிவில் முடித்து வீட்டுக் கடன் பிரிவில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

ஸ்டைபண்டு எவ்வளவு: மெட்ரோ நகரங்களில் பணிபுரிந்தால் மாதம் ரூ.20 ஆயிரமும், இதர நகரங்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமும் ஸ்டைபண்டாக வழங்கப்படும்.

தேர்ச்சி முறை
: நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 மே 18.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு