விஜய் சேதுபதியால் தலை தப்பிய தர்ம துரை!

விஜய் சேதுபதியால் தலை தப்பிய தர்ம துரை!

சீனு இராமசாமியின் எழுத்து, இயக்கத்தில் திருநங்கைக்கு வேலை கொடுப்பது, கிராமத்தில் மருத்துவர் வேலை செய்வது, பகை தீர்ந்து அன்பு பாராட்டுவது உடல்தானத்தின் முக்கியத்துவம், செகண்ட் இயர் சின்ட்ரோம், புரோட்டா மைதாவின் கெடுதலால் கேரளாவில் அதற்கு தடை, மருத்துவ கல்லூரிரேகிங் ஹாஸ்யங்கள்… உள்ளிட்ட ஏகப்பட்ட நல்ல விஷயங்கள்… ஆங்காங்கே சொல்லப்பட்டிருந்தாலும் திரைக்கதை உத்தியில் இயக்குநருக்கு ஏற்பட்ட குழப்பம் காட்சிகளில் தெரிகிறது. முதல் பாதி வரைக்கும் பல காட்சிகள் தேவையே இல்லை என்று ஆடியன்ஸ் வாய் விட்டு சொல்லும் படம் ‘தர்மதுரை’யாகத்தான் இருக்கும்.

dharmadurai aug 21

தன் சகோதரர்களின் பணத்தாசையால் தன் காதலியை கல்யாணம் செய்து கொள்ள முடியாது வாழ்க்கையை இழக்கும் இளம் டாக்டர் விஜய் சேதுபதி, குடிநோயாளி ஆகிறார். கூடவே, குடும்பமானத்தையும் அடிக்கடி கப்பலேற்றுகிறார்.
அதனால் அவரை கொல்லவும் துணிகிறது குடும்பம். அதனால் தன் அம்மா ராதிகாவின் அட்வைஸ் படி, குடும்பத்தை விட்டு பிரியும் விஜய் சேதுபதி, மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா? இல்லையா..? தமன்னா – சிருஷ்டி டாங்கே இருவருக்கும் விஜய் சேதுபதிக்கு மான உறவு என்ன..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், சற்றே விறுவிறுப்பு கம்மியாகவும் விடையளிக்கிறது ‘தர்மதுரை’ படத்தின் மீதிக் கதை.
ஆனால் ஒட்டு மொத்த பிரச்னைக்கும் எந்த வித நியாயத்தையும் கதை- திரைக்கதையில் செய்யாமல் வெறுமனே ஜம்ப் ஆகி, காட்சிகள் விரிவதுதான் மறுக்க முடியாத சோகம்.

எம்.பி.பிஎஸ் படித்த டாக்டர் தர்மதுரையாக, விஜய் சேதுபதி – குடி அடிமை நோயாளியாக, வாழ்ந்திருக்கிறார்.’தர்மதுரை’ கதாபாத்திரத்தில் பக்காவாகப் பொருந்துகிறார். போதையில் அலப்பறை செய்வது, ஆங்கிலம் கலந்து பேசி கவர்வது, சாவு வீட்டில் குத்து டான்ஸ் ஆடுவது, காட்சிக்குத் தகுந்தாற்போல உணர்வுபூர்வமாக நடிப்பது என பின்னி எடுக்கிறார். ஒற்றைக் கதாபாத்திர பலத்துடன் படம் முழுக்க தாங்கி நிற்கிறது சேதுபதியின் நடிப்பு.

ராதிகாவின் கேஷூவலான நடிப்பு, சீனியர் நடிகை என்பதை அழுத்தமாக பதிக்கின்றார், எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் ஏதோ ஒரு பிள்ளை மீது அம்மாவிற்கு அதிக பாசம் இருக்கத்தான் செய்யும், அதை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறார், மற்ற 3 பிள்ளைகள் கஷ்டப்படும் நேரத்தில் கூட விஜய் சேதுபதிக்காக அவர் அழும் காட்சிகள் எல்லாம் சிரிப்பை தாண்டிய யதார்த்தம்.

ஐஸ்வர்யா இந்த பொண்ணு என்னம்மா நடிக்குது என படம் பார்த்தவர்கள் அனைவரும் பேசிய வார்த்தைகள், சுருக்கமாக கூறவேண்டுமானால் லேடி விஜய் சேதுபதி. படத்தின் முதல் பாதி காமெடி, கலாட்டா, கல்லூரி பருவம் என ஜாலியாக செல்கிறது. இரண்டாம் பாதி மிகவும் எமோஷ்னலாக செல்வதால் ஒரு சில இடங்கள் கொஞ்சம் படம் நீளமாக இருப்பதாக எண்ண தோன்றுகின்றது

மொத்தத்தில் ‘ ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா” என்பார் வடிவேலு ஒரு திரைப்படத்தில். சீனு ராமசாமியின் திரைக்கதையின் பிசிறுகள், அதிலுள்ள செயற்கையான நாடகத்தன்மைகள் கொஞ்சம் நீ..ளமான போக்கு நம்மை சலிப்படைய வைத்தாலும் விஜய சேதுபதியால் இப்போ தப்பியிருக்கிறார்.

error: Content is protected !!