தனுஷ்-நடித்த Hollywood படமான ”எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” டிரைலர்! – AanthaiReporter.Com

தனுஷ்-நடித்த Hollywood படமான ”எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” டிரைலர்!

நடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான “எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” திரைப்படத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ளது!  இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மந்திர தந்திரங்கள் மூலம் பேய்களை ஓட்டுபவராக தனுஷ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் திறமைக்கு பரிசாக, முன்னதாக பாலிவுட் படமான ரான்ஜனா மாற்றும் சமிதாப் படங்களில் நடித்தார். பின்னர் அவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாக அறிவிப்புகள் வெளியானது. அதன் பின்னர் அவர் “எக்ஸ்டார்டினர் ஜர்னி ஆப் த பாஃகிர்” படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருந்த இப்படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!