தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் டீசர்! – AanthaiReporter.Com

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் டீசர்!

நம்ம கோலிவுட்டில் நயகனாக தன் வாழ்க்கையை தொடங்கிய நடிகர் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் இவர் படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளன. இவர் இந்தியில் நடித்த ஷமிதாப் மற்றும் ராஞ்சனா இவருக்கு இந்தியுலகில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் தனுஷ். தமிழில் பிஸியாக தற்போது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘வடசென்னை’, ‘விஐபி 2’, ‘மாரி 2’ மற்றும் பெயரிடப்படாத சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது இவர் ஹாலிவுட் உலகில் தன் பயணத்தை ஆரம்பிக்கத் தயாராகி விட்டார். ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் உலகில் அறிமுகமாகிறார்.

ஃப்ரென்ச் எழுத்தாளர் ரோமைன் ப்யூர்டோலஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாகிவரும் படம்தான் ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’. அப்படத்தின் தயாரிப்பில் நீண்ட நாட்கள் ஆனதால், அப்படத்தை இயக்க இருந்த டைரக்டர் படத்திலிருந்து விலகினார். இதனால் அப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இந்த சிக்கல்கள் தீர்ந்த நிலையில், இப்போது இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹாலிவுட் டைரக்டர் கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் அஜதஷத்ரு லாவாஷ் படேல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். மும்பையில் இருந்து பாரீஸ் செல்லும் தனுஷின் பயணம்தான் படத்தின் கதையாம். பெரேனிஷ் பெஜோ, பர்கத் அப்தி, எரின் மோரியாட்டி, அபேல் ஜஃப்ரி, ஜுக்னாட் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீஸர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.