’தேவராட்டம்’ படத்தின் ஹைலைட்ஸ் என்ன? இயக்குநர் முத்தையா பேட்டி!

’தேவராட்டம்’ படத்தின் ஹைலைட்ஸ் என்ன? இயக்குநர் முத்தையா பேட்டி!

தமிழில் அடுத்தடுத்து திரைப்படங்களைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்டுடியோ க்ரீன் K.E ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் ,மஞ்சிமா மோகன் நடித்துள்ள  திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார் .இப்படம் ஸ்டுடியோ க்ரீன்யாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப் படம்!கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் – முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும்.நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில் வெளியா தன பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .. சக்தி சரவணன் ஒளிப்பதிவுசெய்துள்ளார் . பிரவீன் K .L  படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார் .மேலும் இந்த படத்தில் சூரி , வினோதினி வைத்தியநாதன் , போஸ் வெங்கட் , வேலராம மூர்த்தி , பெப்ஸி விஜயன் , சந்துரு சுஜன் , ரகு ஆதித்யா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .இந்த படம் மே 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது .

இந்தப் படம் குறித்து இயக்குநர் முத்தையாவிடம் பேசிக் கொண்டிருந்த போது, “தேவராட்டம் என்பது வெற்றிக்கான ஆட்டத்தை குறிக்கும் சொல். இந்த ஆட்டம் மன்னர் காலம் தொட்டே இருக்கிறது. அதிலும் இதை எல்லா சமூகத்தினரும் ஆடிய ஆட்டம். ஆக இதை ம்னதில் கொண்டு ஹீரோ-வுக்கு வெற்றி என்ற பெயரை வைத்து விட்டு படத்துக்கு தேவராட்டம் என்று பெயர் வைத்திருக்கிறோம். அதிலும் இப்போதைய நாட்டு நடப்பைப் பார்க்கும் போது நமக்குத் தேவை நேதாஜி மாதிரியான ஆக்‌ஷன் தலைவர் என்பதை சகலரும் உணரும் படி கதையை நகர்த்தி இருக்கிறோம்.

இது புரியாமல் அல்லது புரிந்தாலும் வேண்டுமென்றே தேவராட்டம் ஜாதிப் படம் என்று சொல் வதைக் கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இப்படி எல்லாம் ஒரு சினிமா=வை சாதி ரீதியாக பார்க்கும் பார்வை 2015க்கு பிறகுதான் வந்துள்ளது. தேவர் மகன், பருத்தி வீரன் போன்ற படங்களை எல்லாம் அந்த எல்லைக்குள் அடக்காமல் கண்டு களித்தார்கள். ஆனா இப்போது ஒரு சிலப் படத்தை முத்திரைக் குத்துவதில் கூட அரசியல் இருக்கிறது. ஒரு விஷய்ம் தெரியுமா? அடிப்படையில் நான் ஒரு டீக் கடைக்காரன், எனக்கும் என் படைப்புகளுக்கும் எந்த வித பாகுபாடும் பார்க்கத் தெரியாது.

இந்த படத்தின் நாயகன் ஒரு வக்கீலாகத்தான் வருகிறார். அதாவது நடக்கும் தவறுகளை படித்தவர் களே பார்த்து விட்டு மவுனமாக போகக் கூடாது என்ற சொல்ல முயன்றுள்ளேன். அதிலும் சட்டம் படித்த ஒருவன் நியாயத்தை மீறும் போது தண்டனையை தானே கொடுக்கும் ரோல்தான் கவுதம் கார்த்திக்.அதே சமயம் இந்த படம் அக்கா- தம்பி பாசத்தை ஆழமாய் வெளிப்படுத்தும். அதுவும் 6 அக்கா., ஒரு தம்பி மற்றும் குடும்பம் என்பதால் சகல தரப்புக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

error: Content is protected !!