டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவச அனுமதி அமலானது!

டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவச அனுமதி அமலானது!

இந்திய தலைநகர் டெல்லி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக் கும் திட்டம் இன்று முதல் துவங்கியது. அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிற இலவச அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. மேலும் பயணம் செய்யும் பெண்களுக்கு உரிய கட்டணத்தை பேருந்து நிர்வாகம் அரசிடம் கோரிப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் தலைமைஉஇலான டெல்லி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை இருந்து துவங்குவதாக அரசிதழ் அறிவிப்பு திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி பெண்களுக்கான இலவச பயணத்திட்டத்தை துவக்குவதற்கு டெல்லி அமைச்சரவை பூர்வாங்க ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து பல தயாரிப்பு ஏற்பாடுகளுக்குப்பின் செவ்வாயன்று இலவச பேருந்து பயண திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அரசில் பணிபுரியும் பெண்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பெண்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் இந்த இலவச பயண திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள இயலாது. அவர்கள் போக்குவரத்து அலவன்ஸ் என்ற பெயரில் தங்கள் ஊதியத்துடன் வழங்கப்படும் தொகையை கைவிட முன்வந்தால் மட்டுமே இலவச பேருந்து பயண திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

டெல்லி அரசுப் பேருந்துகளில் ஏசி வசதி இல்லாத பேருந்துகளுக்கான கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உள்ளது. ஏசி வசதி உள்ள பேருந்துகளுக்கான கட்டணம் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உள்ளது. பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அனுமதிப்பதால் ஆண்டுக்கு ரூ 350 கோடி அரசுக்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி எல்லைக்குள் செல்லும் எல்லா அரசுப் பேருந்துகளிலும் டெல்லியில் இருந்து அருகில் உள்ள மாநிலங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக 13,000 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த காவலர்களில் 10 சதவீதம் பேர் பெண் காவலர்களாக நியமிக்க படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி மாநகரில் உள்ள 2.2 கோடி மக்களுக்கு நான் மூத்த மகனாக கருதப்படுகிறது. குடும்பத்தைச் சேர்ந்த என்னுடைய தாயார், சகோதரிகள், புதல்வியர் பாதுகாப்பாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வது உறுதி செய்ய வேண்டியது என் கடமை. அதற்காக ஒவ்வொரு பேருந்திலும் ஒரு காவலர் பயணம் செய்வார் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!