இன்னும் 5 ஆண்டுகளில் தினசரி 11 ஜிபி மொபைல் டேட்டா! – கணிப்பு – AanthaiReporter.Com

இன்னும் 5 ஆண்டுகளில் தினசரி 11 ஜிபி மொபைல் டேட்டா! – கணிப்பு

இப்போதெல்லாம் பெரியவரோ, சிறியவர்களோ வயது வித்தியாசமின்றி ஸ்மார்ட்போன் மூலமாக இணையதளம் பயன்படுத்துவோர் அதிகமாகி விட்டது. அதிலும் , வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள், ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் பரிவர்த்தனை போன்றவற்றுக்காக பயன்படுத்துவதால் நம் இந்தியாவில் இணையப் பயன்பாட்டாளர்க ளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் 2021ஆம் ஆண்டில் இந்த எண்ண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக உயரும் என்று சிஸ்கோ விஷுவல் நெட்வொர்க்கிங் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்திருந்தது.

தற்போது 373 மில்லியன் என்றுள்ள இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 829 மில்லியனாக (82.9 கோடி) அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 30 சதவிகிதமாக இருக்கும். அதிவேக அலைவரிசை, அறிவார்ந்த நெட்வொர்க், கூடுதல் தரம்கொண்ட மல்டி மீடியா போன்றவையும், விரைவாக டேட்டா மற்றும் வீடியோவை தரவிறக்கம் செய்யும் வகையிலான உயர் அலைவரிசை வசதிகளும் பயன்பாட்டுக்கு வரும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் 2022 ல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள்  தினமும் 11 ஜிபி மொபைல் டேட்டா பயன்படுத்துவார்கள் என்று மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்ப டுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்ல் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களின் சலுகைகளால் தினசரி இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது கொண்டே செல்கிறது என்று ஏற்கெனவே தெரிய வந்துள்ளது.

இதனிடையே 2022 ல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் தினசரி 11 ஜிபி மொபைல் டேட்டா பயன்படுத்துவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 500 எம்பி முதல் 1 ஜிபி வரை பயன்ப டுத்தப்படும் மொபைல் டேட்டா பயன்பாடும் மிக வேகமாக அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மொபைல் டேட்டா பயன்பாடு 40 % அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவ ரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 30 கோடிக்கு மேல் உள்ளதால் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மொபைல் டேட்டாவை வீடியோ கால்கள், live stream சேவைக்காக அதிக பயன்படுத்துகிறார்கள் என்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வீடியோ பகிர்வுகள் அதிகம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.