எஸ்.பி. ஐ. பேங்கில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க இன்று முதல் கட்டுப்பாடு! – AanthaiReporter.Com

எஸ்.பி. ஐ. பேங்கில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க இன்று முதல் கட்டுப்பாடு!

நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான தினசரி வரம்பினை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ20 ஆயிரமாக இன்று முதல் குறைக்கப்பட்டது!

கொஞ்சம் அதிகபிரசிங்கத்தனமாக நடந்து கொள்ளும் எஸ் பி ஐ தனது வாடிக்கையாளர் தங்களது கணக்கில் இருந்து ATM அட்டைகள் மூலம் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பினை ₹40 ஆயிரத்திலிருந்து ₹20 ஆயிரமாக குறைப்பதாக கடந்த மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி இன்று முதல் கிளாசிக் மற்றும் மாஸ்ட்ரோ ஏடிஎம் அட்டைகள் கொண்டு பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் ₹20 ஆயிரம் வரையில் மட்டுமே பணத்தினை எடுக்க முடியும் .

மேலும் இந்த வகை ஏ டி எம் அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வேறுவகை ஏ டி எம் அட்டைகளுக்க விண்ணப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ஏ டி எம் அட்டைகள் கொண்டு பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது அதிக அளவில் மோசடி நடப்பதாகவும், அதைக் கருத்தில் கொண்டும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்த வரம்பு குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் SBI தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.