ராகுல் ராஜினாமா அறிவிப்பு; காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்க மறுப்பு!

ராகுல் ராஜினாமா அறிவிப்பு; காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்க மறுப்பு!

டெல்லியில் இன்று நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்கான கடிதத்தை ராகுல் காந்தி அளித்துள்ளார். ஆனால் ராகுல் காந்தியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், ராகுல் காந்தியே தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கூறி நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிப்பார் என்றும் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கின்றது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி கண்டார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பு ஏற்று உத்திர பிரதேச மாநில தலைவர் ராஜ் பாபர் தனது பதிவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதேப் போல் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கண்ட வீழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் மூத்த தலைவர் HK பாட்டில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு பெறுப்பு ஏற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நிரன்ஜன் பட்நாயிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில்  , அக் கட்சியின் செயற்குழு கூட்டம் புது டெல்லியில் இன்று காலை நடைபெற்றது. சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். பிரியங்கா காந்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ப. சிதம்பரம், கர்நாடாக முன்னாள் முதல்வர் சீதாரமையா, சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் முதல்வர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். ராகுல் காந்தி தலைமையில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சித் தலைமை பொறுப்பை துறப்பதாக ராகுல் காந்தி அறிவித்தார். மேலும் கட்சித் தலைமை பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தி அளித்தார். ஆனால், ராஜினாமா கடிதத்தை ஏற்க செயற்குழு உறுப்பினர்கள் மறுத்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதை அடுத்துகாங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிப்பார் எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் கட்சி செயல்பாடுகளை மறுசீரமைப்புச் செய்யவும், நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு வழங்கி காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், ‘‘மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே சமயம் காங்கிரஸின் நிலைமை மோசமடையவில்லை. விரைவில் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!