ர‌ஃபேல் போர் விமானம் – தெளிவான அனலைஸிஸ்…! – AanthaiReporter.Com

ர‌ஃபேல் போர் விமானம் – தெளிவான அனலைஸிஸ்…!

1. 2012 ஆம் ஆண்டு 126 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது காங்கிரஸ் அரசாங்கம்…. அதில் 18 விமானம் மட்டும் ரெடியாக அங்கிருந்து இறக்குமதி செய்யவும் மீதமுள்ள 108 விமானங்களை ஹெச் ஏ எல் மூலம் உள்ளூரில் வடிவமைக்கபட பிளான்……!

2. ஆனால் 2014 வரை காங்கிரஸ் அதை ஏதோ காரணத்துக்காக செயல்படுத்தவே இல்லை….

3. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிஜேபி இந்த 126 விமானங்கள் வாங்குவதை தடை செய்தது.

4. தொடர்ந்து இந்திய ஏர்ஃபோர்ஸ் விமான விபத்துகளில் பல ஜெட் ஃபைட்டர் விமானங்கள் பாழாகிய வகையில் மோடி அரசாங்கம் போர் விமானங்களை வாங்கும் கட்டாயத்தில் தள்ளபட்டு வெறும் 36 விமானங்களை மட்டும் 58000 கோடிக்கு வாங்க கையொப்பம் இடுகிறது.

5. ஆனால் 36 விமானங்களும் சிகேடி / எஸ் கேடி என்னும் இறக்குமதி டெர்மில் வாங்க ஒப்பம். இந்த டெக்னாலஜி ட்ரான்ஸஃபர் டு ஹெச் ஏ எல்லுக்கு கிடையாது.

6. காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள் பிஜேபி அதிக விலை கொடுத்து வாங்கியது மட்டுமில்லாமல் இதனை தனியாரிடம் (ரில்யன்ஸ்) தாரை வார்த்து விட்டது என குற்றம் சாட்டியது.

7. இந்திய அரசாங்கமோ – இது அரசு டீல் அல்ல……டஸால்ட் நிறுவனம் ஃபிரான்ஸின் தனியார் நிறுவனம், ரிலயன்ஸ் ஏற்கனவே பல தடவாளங்களை இந்திய ஆர்மிக்கு சப்ளை செய்யும் நிறுவனம் அதனால் இந்த டீல் அரசாங்கத்துக்கு சம்பந்தம் இல்லை – ஆனாலும் அரசு செலுத்தும் 58000 கோடி ரூபாய்களை பிரான்சு நாடு திரும்பவும் 30% இந்திய ஏரோனாட்டிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் 20% ரஃபேல் விமான பாகங்களை உலகம் முழுவதும் இந்தியாவில் உற்பத்தி செய்து அனுப்பவும் என தெரிவித்து 24,000 திரும்ப வரும் ஒப்பந்தத்தை காட்டுகிறது.

8. இந்திய ராணுவ விமான ரகசியம் எப்படி தனியாரினி கையில் என விடாமல் கேட்கும் கட்சிகளுக்கு உண்மை பதில் – இந்த விமான எஞ்சின் தயாரிக்கும் சாஃப்ரன் மற்றும் இதன் எலக்ட்ரானிக்ஸ் மூளை தேல்ஸ் மற்றும் அனைத்து டெக்னாலஜிகளையும் இந்திய டி ஆர் டி ஓ க்கு (DRDO – Defence Reserch Development Organasation)நேரடியாக வந்து சேரும் மற்றும் ரிலயன்ஸ் இதை இம்ப்போர்ட் டீலராக மட்டுமே செயல்படும் என்று கூறுகிறது.

9. இல்லை அதிக விலை என திரும்பவும் பல கட்சிகள் கேள்வி கேட்க – இல்லை குண்டு தாங்கி மற்றும் அதி லேட்டஸ்ட் கான்ஃபிகிரேஷன் இருக்கிறபடியால் இது பெஸ்ட் விலை மற்றும் 50% (24000) கோடி திரும்ப வரும் என்பதால் இது பெஸ்ட் டீல் என மேலோட்டமாக சொன்னாலும் இதன் ஃபுல் விவரங்களை இரு நாட்டு ராணுவ நாட்டு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால் இது வெளியே சொல்ல சாத்தியமில்லை என ராணுவ மந்திரி விளக்கம்.

10. 36 ரஃபேல் விமானங்கள் இதோ படத்தில் இருக்கும் ஜெட்கள் 2019 செப்டம்பரில் இந்திய விமான படையில் இன்டக்ட் செய்யும்.

உள்ளது உள்ளபடியே

பட உதவி – சாஃப்ரன் மற்றும் டஸால்ட்.