எங்கே போகும் .. இந்த பணப் பாதை? யாரோ.. யாரோ..அறிவாரோ?

எங்கே  போகும் .. இந்த பணப் பாதை? யாரோ.. யாரோ..அறிவாரோ?

பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அண்மையில் அறிவித்தது கறுப்பு பணத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக அமைந்துள்ளதுடன், ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கிய முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது. கறுப்பு பணத்தை ஒழிக்கும் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்திற்கு பலவிதங்களில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்நடவடிக்கை டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியுள்ளது. ஆனால் முறைப்படுத்தப் படாத தொழிலாளர்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவில் ரொக்கமல்லாத பரிவர்த்தனையை சிறிதளவு உயர்த்தலாமே தவிர, முற்றிலும் அதை கொண்டுவருவது சாத்தியம் இல்லாதது.

edit nov 25

அப்படி எல்லா பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம், ஆன்லைன் டிரான்ஸ்ஷாக்ஷன், டெபிட் கார்டு, காசோலை, வரைவோலை இதன் மூலம் தான் நடப்பது நிறைவேற வேண்டுமெனில் முதலில் இன்டெர் இணைப்புகள் தடையில்லாம இந்தியாவெங்கிலும் கிடைக்க வழி செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் தர்போது நம்ம நாட்டில் 40 சதவீதம் மக்கள் தான் இன்டெர்நெட் வசதிகளை பயன்படுத்துகிறார்கள்.. அதில் ஆன்லைன் வர்த்தகம், பணப்பறிமாற்றங்கள் சதவீதம் பாதியாகத்தான் உள்ளது.

எனவே இன்டெர் இணையம் அதிவேகத்துடன் இயங்கவும், எங்கேயும் தங்கு தடையின்றி இணையம் கிடைக்கவும் முதல்ல அரசாங்கம் வழிவகை செய்யனும். ஏன்னா பல நேரங்கள்ல ஆன்லைன் வழியா ஏதாவது பேமென்ட் போகும் போது இடையில் இன்டெர்நெட் கோளாறு ஏற்படும்போது போக வேண்டிய இடத்திற்கு அந்தப்பணம் போகாமல் இடையில் நின்று மீண்டும் அது வங்கிக் கணக்கில் திரும்ப வருவதற்கு 24 மணிநேரம் முதல் 48 மணிநேரம் ஆகிவிடும். வங்கியில் இருக்கிற பணத்தை ஒருவர் கரன்ட்பில்லை இறுதி நாள்ல கட்ட முயற்சிக்கும் போது இப்படி ஆகி விட்டதென்றால் அவரோட நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்..பணம் என்னாச்சோ கரண்ட் பில்லுக்கு கட்ட வச்சிருந்த பணம் இப்படி நடுவில் மாட்டிக் கொண்டதே என்று கவலை கொள்வோர்கள் தான் அதிகம். வேறு பணத்தை கடன் வாங்கி அதனை வங்கியில் டெபாசிட் பண்ணி மறுபடியும் அவர் அந்த பேமன்ட்டை செலுத்தறதுக்கு ரொம்பவே சிரமப்படனும்.. அதுக்குள்ள டேட் முடிஞ்சு அபராதத்தோட செலுத்தற நிலை வரலாம். அதனால் எல்லா பரிவர்த்தனைகளையும் ஆன்லைன்ல கொண்டு வர நினைக்கும் அரசாங்கம் அதற்கான தொழில் நுட்ப கட்டமைப்புகளையும் சரியான முறையில் அமைத்துத்தருவது அவசியமல்லவா? முதல்ல இன்டெர் நெட் சேவையை எல்லா இடங்களிலும் கொடுக்க முயற்சிப்பதோடு இடையில் இணைப்பில் தொழில்நுட்பக்கோளாறு இல்லாமல் இருந்தால் தான் இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை மக்கள் பயமின்றி பயன்படுத்த முடியும்..

இதனிடையே ஆனால் ஸ்வீடன் ஒரு படி மேலே சென்று டிஜிட்டல் கரன்ஸியை உருவாக்குவது குறித்து திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுதும். ஸ்வீடன் மட்டுமல்லாமல் உலகின் மேலும் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்ஸி குறித்த பரிசீலனையில் இறங்கி இருக்கின்றன. இங்கிலாந்து, ரஷ்யா, கனடா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் டிஜிட்டல் கரன்ஸிகளுக்கான ஆரம்பகட்ட பரிசீலனையில் இருக்கின்றன என்பதையும் `உலகம் கேஷ்லெஸ் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதனால் அரசுகள் டிஜிட்டல் கரன்ஸியை கொண்டுவருவது தவிர்க்க முடியாதது. அதே சமயத்தில் சமூகத்தில் இருந்து பணம் முற்றிலும் நீங்காது. குறைந்த மதிப்புள்ள கரன்ஸி தாள்களுக்கான தேவை இருந்துகொண்டேதான் இருக்கும்’ என ஹார்வேர்ட் பேராசிரியர் கெனத் ரோகாஃப் தெரிவித்திருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

உதய்

Related Posts

error: Content is protected !!