சிபிஎஸ்இ: 10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு- மீண்டும் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!

சிபிஎஸ்இ:  10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு- மீண்டும் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது கொண்டுவரப்பட்ட கல்வி முறையையே நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம். அது ‘கேள்வி- பதில்’ என்ற முறையிலேயே அமைந்துள்ளது. அதனால் தற்போதைய சூழலுக்கு ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளிலும் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டியது அவசியம். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், தங்களது குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து, தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என கருதுகின்றனர் என்ரு கடந்த மாதம் கோவையில் நடந்த ஒரு விழாவில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மீண்டும் கட்டாயமாக்கப்படும் என்று தற்போது தெரிவித்தார்.

cbse nov 15

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அந்த மாநில கல்வியமைச்சரை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ”சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை மீண்டும் கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவு அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்படும். பள்ளிக் கல்வியின், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

அதேபோல், 5 மற்றும் 8-ஆம் வகுப்புத் தேர்வுகளையும் பொதுத் தேர்வுகளாக மாற்றுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். இது தொடர்பான முன்மொழிவு முதலில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்யப்படும். ராஜஸ்தானில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் பாராட்டுக்குரியவை.பின்தங்கிய மாநிலமாக 25 ஆண்டுகளுக்கு முன் அழைக்கப்பட்ட ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகள் அளிக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 10ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறைதான் அமலில் இருந்தது. அதன் பின் அந்த நடைமுறை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!