சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனம் ; கொலிஜியம் மீண்டும் பரிந்துரை! – AanthaiReporter.Com

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனம் ; கொலிஜியம் மீண்டும் பரிந்துரை!

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். தற் போது 27 நீதிபதிகள் உள்ளனர். 4 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியான நீதிபதி களை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்யவேண்டும். அந்த வகையில், நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்ஃப் நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலிஜியத்துக்கே திரும்பி அனுப்பியது.

இந்நிலையில், மேலும் 2 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொலிஜியம், தனது புதிய பரிந்துரை கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கூறியுள்ளது.
நீதிபதி கபாய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகயும், நீதிபதி சூரிய காந்த், இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

திறமை மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கொலிஜியம் கூறியிருக்கிறது. குறிப்பாக, உச்சநீதிமன்றத்தில் எஸ்.எஸ்டி. பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதை கவனத்தில் கொண்டு, நீதிபதி கவாய்க்கு பதவி உயர்வு வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. நீ

திபதி அனிருத்தா போஸ் தற்போது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், போபண்ணா கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே, பரிந்துரைத்த இந்த நீதிபதிகளை மீண்டும் பரிந்துரை செய்திருப்பதால் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிற