பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி!, – AanthaiReporter.Com

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அனுமதி!,

சர்வதேச அளவில் தற்போது ராணுவத்தில் ‘டிரோன்ஸ்’ என அழைக்கப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. இவை எதிரிநாடுகளை உளவு பார்க்கவும், தேவைப்படும் பட்சத்தில் எதிரிகளின் இலக்கை ஏவுகணை வீசி அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இந்திய இராணுவத்தில் 200 ஆளில்லா விமானங்கள் உள்ளன. இவை அனைத்துமே இஸ்ரேலிடம் இருந்து மொத்தமாக வாங்கப்பட்டவை.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்துள்ள புதிய திட்ட அறிக்கையில் ராணுவத்துக்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு 400க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் தேவை என கூறப் பட்டுள்ளது. 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து உளவு பார்க்கக் கூடிய ஆளில்லா விமானங் கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. இவைகள் அங்கிருந்தபடியே, எதிரிகளின் இலக்கை ஏவுகணை வீசி தாக்கி அழிக்கக் கூடியவை. இவற்றை நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் இயக்க முடியும். இந்நிலையில், இந்தியாவுக்கு தேவைப்படும் ஆளில்லா போர் விமானங்களை பதுகாப்புத் துறை யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவும் தயாரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. தற்போது அது, ‘கதக்’ என்ற ஆளில்லா போர் விமானத்தை தயாரிப்பதற்காக ரூ.2,650 கோடி மதிப்பிலான ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

அதே சமயம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனியார் ஆளில்லா விமானங்களை இயக்க அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அனுமதிக்க இருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

தற்போது, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆளில்லா விமானம் இயக்க விமானப் போக்குவரத்து இயக்குநகரகம் தடை விதித்துள்ளது. “விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆளில்லா விமானம் பறக்க விடுவதற்கான அனுமதி, ஆன்லைனில் அக்டோபர் மாதம் முதல் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக செயலாளர் ஆர்.என். சவுபே கூறினார்.

தற்போதைய விமான விதிகள், ஆளில்லா விமானங்களை வாங்கவோ அல்லது விற்கவோ, அனுமதிக்கவில்லை.கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆளில்லா விமானத்தை இயக்க பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்த விமானப் போக்குவரத்து இயக்குநகரகம் தடை விதித்தது.

ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆளில்லா விமானம் பயன்படுத்து வதற்கான வரைவு நெறிமுறைகளை கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விமானப் போக்குவரத்துத் துறை தயாரித்தது.அந்த வரைவு விதிமுறைகளில், ஒவ்வொரு ஆளில்லா விமானங்களுக்கும் தனித்தனியாக அடையாள எண்கள் வழங்கப்படும். 250 கிலோ கிராமிற்கு குறைய எடை கொண்ட நானோ ரக ஆளில்லா விமானத்தை இயக்க ஒருமுறை அனுமதி பெற்றாலே போதும் என்று கூறப்பட்டுள்ளது.

சரியான நோக்கத்துக்காக மட்டுமே ஆளில்லா விமானம் பயன்படுத்தப்படுகிறதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவு “ஆளில்லா விமான மண்டலமாக” அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா தலைமையிலான 13 உறுப்பினர்கள் கொண்ட அதிகாரிகள் குழு, இந்த ஆளில்லா வான்வழி வாகன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுத்து வருகிறது.ஆளில்லா விமான தொழில் நுட்பத்தை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தையும் அதிகாரிகள் குழு வரையறுத்து தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.