குடியுரிமை திருத்த சட்டம் ரொம்ப நல்ல திட்டம் – ரஜினி பேட்டி – வீடியோ! – AanthaiReporter.Com

குடியுரிமை திருத்த சட்டம் ரொம்ப நல்ல திட்டம் – ரஜினி பேட்டி – வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று மீடியாக்களைச் சந்தித்த போது, “ சி.ஏ.ஏ.வால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்ற தவறான தகவல் பரப்பப்பப்படுகிறது. இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றினால் முதல் ஆளாக எதிர்ப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன்என்பிஆர் அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி னால் தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும் எனவும் ரஜினிகாந்த் கூறினார்.

நாடு முழுவதும் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. குறிப்பா சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் சிஏஏ தொடர்பாக ஆக்டர் ரஜினி எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார். இன்னிக்கு (பிப்ரவரி 5) காலை சென்னையில் தனது வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது வாசலில் காத்திருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி.

அப்போ, “சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. நீங்கள் எதுவுமே கருத்து கூறவில்லை. உங்களுடைய கருத்து என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொன்ன ரஜினி, “”என்பிஆர் ரொம்பவே முக்கியம். 2010 மற்றும் 2015-ம் ஆண்டு காங்கிரஸ் செய்தது. 2021-ல் இந்திய நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துதான் ஆகவேண்டும். அதில் யார் உள்நாட்டுக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டாமா? அது ரொம்பவே முக்கியம். அதனால் என்ன பிரச்சினை என்று தெரியாது.

இத்தினிக்கும் என்ஆர்சியை இன்னும் அமல்படுத்தவில்லை. அதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். அது சரியாக இருக்குமா என்பது எல்லாம் பார்த்துதான் முடிவு செய்வார்கள். சிஏஏ தொடர்பாகத் தெளிவாக இந்திய மக்களுக்கு எவ்விதப் பிரச்சினையுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். பக்கத்து நாடுகளிலி ருந்து வருபவர்களுக்குக் கொடுப்பதா, வேண்டாமா என்பது தான் பிரச்சினை. முக்கியமாக முஸ்லிம்களுக்குப் பெரிய அச்சுறுத்தல் என்று பீதியைக் கிளப்பிவிட்டார்கள். அது எப்படி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாகும்.

இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால், பிரிவினைக் காலத்தில் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று சென்றார்கள். இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் இதுதான் நம் நாடு, ஜென்ம பூமி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி இந்த நாட்டிலிருந்து வெளியே அனுப்புவார்கள்.

அந்த மாதிரி ஒன்று நடந்தால் இந்த ரஜினிகாந்த் அவர்களுக்காக முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் அவர்களுடைய சுய லாபத்துக்காகத் தூண்டி விடுகிறார்கள். இதற்கு மதகுருக்களும் துணை போகிறார்கள். இது ரொம்ப தப்பான விஷயம்.

முதலில், மாணவர்களுக்குச் சொல்லிக் கொள்வது எல்லாம் போராட்டத்தில் இறங்கும் போது தீர யோசித்து ஆராய்ந்து, பேராசிரியர்களிடம் பேசி இறங்குங்கள். இல்லையென்றால் உங்களை அரசியல்வாதிகள் உபயோகிக்கப் பார்ப்பார்கள். அப்படி இறங்கிவிட்டால் உங்களுக்குத் தான் பிரச்சினை. காவல்துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது. எஃப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால் வாழ்க்கையையே முடிந்து போய்விடும்”. என்று தெரிவித்தார்.