சதர்ன் ரயிலேவெயின் பண்டிகைக் கால ஸ்பெஷல் டிரெயின் லிஸ்ட்!

சதர்ன் ரயிலேவெயின் பண்டிகைக் கால ஸ்பெஷல் டிரெயின் லிஸ்ட்!

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, சபரிமலைப் பயணம், தைப்பூசம், பொங்கல் திருநாள் என பண்டிகைகள் தொடர்ந்து வருவதையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

southern rail dec 10

இது குறித்து சத்ர்ன் ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி – செங்கல்பட்டு சிறப்பு ரயில்

ரயில் எண் 06062: டிசம்பர் 15, 22, 29, ஜனவரி 5, 12, 19, 26, பிப்ரவரி 2, 9 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

ரயில் எண்: 06061: டிசம்பர் 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27, பிப்ரவரி 3, 10 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 2.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ரயில் எண் 06064: டிசம்பர் 18, 25, ஜனவரி 1, 8, 15, 22, 29, பிப்ரவரி 5 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

ரயில் எண் 06063: டிசம்பர் 19, 26, ஜனவரி 2, 9, 16, 23, 30, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து 1.45 மணிக்குப் புறப்பட்டு 2.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில்கள் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்சி -சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்

ரயில் எண் 06066: டிசம்பர் 12, 19, 26, ஜனவரி 2, 9, 16, 23, 30, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

ரயில் எண் 06065: டிசம்பர் 13, 20, 27, ஜனவரி 3, 10, 17, 24, 31, பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

கோவை – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்

ரயில் எண் 06068: டிசம்பர் 19, 21, 26, 28, ஜனவரி 2, 4, 9, 11, 16, 18, 23, 25, 30, பிப்ரவரி 1, 6, 8 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

ரயில் எண் 06067: டிசம்பர் 20, 22, 27, 29, ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31, பிப்ரவரி 2, 7, 9 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு கோவையை சென்றடையும்.

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஆத்தூர், சின்ன சேலம், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ஈரோடு – சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில்

ரயில் எண் 06028: டிசம்பர் 17, 18, 24, 25, 31 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.45 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

ரயில் எண் 06027: டிசம்பர் 17, 18, 24, 25, 31 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு ஈரோட்டை சென்றடையும்.

இந்த ரயில் சங்ககிரி, சேலம், சேலம் டவுன், வாழப்பாடி கேட், ஆத்தூர், சின்ன சேலம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல் -கொல்லம் சுவிதா சிறப்பு ரயில்

ரயில் எண் 82632: ஜனவரி 8 -ஆம் தேதி பிற்பகல் 3.35 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் காயங்குளம், செங்கநூர், திருவலா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Related Posts

error: Content is protected !!