தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போடும் ஃபேஷன்!- சீனா சோகம்! – AanthaiReporter.Com

தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போடும் ஃபேஷன்!- சீனா சோகம்!

உலக அளவில் பல்வேறு இளைஞர்களிடையே பல்வேறு தவறான பழக்கங்கள் பேஷன் என்ற பெயரில் பரவி வருவது வாடிக்கைதான். அந்த வகையில் சீனாவில் தங்களுடைய தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போடும் ஒரு புதிய போக்கு இணையத்தில் பரவி வரு கிறது. இதுகுறித்து , பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சீன ஊடகங்கள் கேட்டு க் கொண்டுள்ளன. ஆம்.  சமீப வாரங்களாக சீனாவில் உள்ள இணைய பயன்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில், தங்களுடைய தோலிற்குள் போடப்பட்ட தையல் வடிவங்களை பகிர்ந்து வந்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஜப்பானிய கேலி சித்திரத்திலிருந்து இந்த போக்கு ஈர்க்கப்பட்ட தாக தோன்றுகிறது. மேலும், இது சர்ச்சைக்குரிய விளையாட்டான ”ப்ளூ வேல்” என்ற சுயமாக காயம் ஏற்படுத்தி கொள்ளும் மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் விளையாட்டு நிர்ணயித்தி ருந்த போக்கை தற்போது இந்த புதிய போக்கும் பெற்றுள்ளது.

இதுபோன்று சுயமாக தீங்கிழைத்து கொள்ளும் முறை பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றில் முடியும் என்றும், இறுதியாக செப்டிசீமியா என்ற ரத்தத்தில் அதிகளவில் நச்சு கலப்பு ஏற்படும் என்றும் ஊடகங்கள் எச்சரித்துள்ளன.

அதாவது  ‘தோலிற்குள் வடிவங்களை தைத்து கொள்வது இளம் வயதினரிடையே மிகவும் ரகசியமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ள பீப்பிள்’ஸ் டெய்லி, அதன் சினா வெய்போ பக்கத்தில் பயன்பாட்டாளர்கள் பதிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. பல புகைப்படங்களில், இந்த அபாயகரமான விளையாட்டில் கலந்து கொண்டவர்கள், தங்களுடைய கைகள், கால்கள் ஏன் உதடுகளில் கூட வண்ண நூல்களை கொண்டு தோலிற்கு குறிப்பிட்ட வடிவங்களை தைத்துள்ளனர். சிலர், அலங்காரத்திற்காக அந்த தையல்களில் குண்டுமணிகளை மாட்டியும், ரிப்பன்களை சேர்த்தும் தைத்துள்ளனர்.

இந்த மாதிரியான புகைப்படங்களை பார்த்து பல்லாயிரக்கணக்கான சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பலர் இதுபோன்று தையல்களை தோலில் போட்டுக் கொண்டவர்களை பைத்தியம் என்றும், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நடவடிக்கைகள் இவை என்றும் திட்டித் தீர்த்துள்ளனர்.