விந்து தானம் செய்ய விரும்புவர்கள் கம்யூனிஸ்ட்டா இருக்கோணும்! – சீனா அதிரடி! – AanthaiReporter.Com

விந்து தானம் செய்ய விரும்புவர்கள் கம்யூனிஸ்ட்டா இருக்கோணும்! – சீனா அதிரடி!

சரவ்தேச அளவில் இப்போது ரொம்ப கேஷூவலாகி போய் விட்டது- உயிரணு தானம். மேரேஜ் செஞ்சுக்காம அல்லது மேரேஜான பிறகு ஹஸ்பெண்டுகிட்டே உள்ள குறைபாடுகளுக்காகவோ உயிரணு தானம் பெற்றுக் குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்களின் எண்ணிக்கை ஃபாரீன்லே எகிறிக்கிட்டே போகுது. அதிலும் சீனாவிலிருந்து இயங்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலி பாபா விந்தணுக்களை ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருவது தெரிந்த விஷயம்தான் . இந்நிலையில் சீனாவில் விந்து தானம் செய்ய விரும்புவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த பெக்கிங் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனையில் உலகின் மிகப்பெரிய விந்து வங்கி உள்ளது. இங்கு ஏப்ரல் 4ஆம் தேதியன்று விந்து தானம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விந்து தானம் செய்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து அந்த மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிக்கை வெளியானதாக வீசேட் செயலியில் தகவல் வெளியானது.

அந்த அறிக்கையில், ‘நன்கொடையாளர்கள் மரபணு நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் இல்லாதவர்களாக இருந்தாலும்கூட நல்ல சிந்தனைகள் மற்றும் குணங்கள் உடையவர்களாக இருத்தல் அவசியம். நன்கொடையாளர் 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் தாயகத்தை நேசிக்கவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஆதரிக்கவும், கட்சியின் கோரிக்கைக்கு விசுவாசமாகவும் இருக்க வேண்டும். சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமான குடிமக்களாகவும், அரசியல் பிரச்சினைகள் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

மேலும், ‘நன்கொடையாளர்களின் உடற்தகுதி, ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து இருமுறை மருத்துவப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்று வெற்றிகரமாக நன்கொடை செய்தவர்களுக்கு 5500 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 56 ஆயிரம்) ரூபாய்கள் வழங்கப்படும்’ என்று கூறியிருந்தது. ஆனா ஏப்ரல் 6ஆம் தேதியன்று அந்தப் பக்கத்திலிருந்த இந்தச் செய்தியை நீக்கி விட்டார்களாக்கும்.