சீனாவில் பூனை மற்றும் நாய்களுக்கு அக்குபஞ்சர் !

சீனாவில் பூனை மற்றும் நாய்களுக்கு அக்குபஞ்சர் !

அக்கு பஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக, பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளி களில் ஊசிகளைக் குத்தி மேற்கொள்ளப்படும் மருத்துவம் ஆகும். இது வலி நிவாரணத்துக்கும், உடலில் உணர்வற்றுச் சென்றுள்ள பகுதிகளில் உணர்வேற்படுத்தவும் இந்த சிகிச்சை முறை உதவுகின்றது. அதாவது சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான அக்குபஞ்சர் முறை மூலம் நீளமான ஊசி உடலின் வலி உள்ள பகுதியில் குத்தப்படும். அதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு உடலில் ஏற்பட்ட வலி குணமாக்கப்படும். கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாய் இயங்குகிறது. உடலில் ஓர் உறுப்பு செயல் இழந்துவிட்டால், ஆங்கில மருத்துவத்தில் அதற்கு சிகிச்சை இல்லை. அந்த உறுப்பு நீக்கப்படும் அல்லது செயல்படாமலேயே உடலில் இருக்கும். அந்த உறுப்பை நீக்குவதால், அதைச் சார்ந்த மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. இந்த அக்குபங்சர் மருத்துவத்தின் மூலம் கத்தியின்றி அந்த பழுதான உறுப்பை மற்ற உறுப்புகளின் ஆதரவுடன் செயல்பட வைக்கலாம்.

மெல்லிய நூலிழை போன்ற ஊசி. அதை உடலில் வைப்பதே தெரியாது. ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தும் ஊசியைவிட பத்து மடங்கு சிறியது. இரு வேறு உலோகங்கள் சேர்ந்த ஊசி அது. அதை ஒரு புள்ளியில் வைத்து தூண்டும்போது, பிரபஞ்ச சக்தி அந்த ஊசியின் வழியாக பாதிப்படைந்த உறுப்புக்குச் செல்கிறது. ஒரு ஆன்டென்னா போல. அப்போது தடை செய்யப்பட்ட சக்திகள் அந்த பழுதடைந்த பகுதிகளில் தூண்டப்படுகிறது. அதிகமாக உள்ள சக்தி வெளியேற்றப்படுகிறது. குறைவாக உள்ள சக்தி அதிகமாகிறது. இவ்வாறு வெளியிலிருந்து மூலக்கூறுகளை உள்ளே செலுத்தாமல் உள்ளே இருக்கும் மூலக்கூறுகளைத் தூண்டுவதால் பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் எல்லாவித நோய்களும் குணமாகிறது.

முன்னொரு காலத்தில் மனிதர்களுக்கு செய்யப்பட்டு வந்த இந்த சிகிச்சை செல்லப்பிராணி களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் ஹைலைட்.. ஆம். தற்சமயம் அதிகப்படியான மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை அக்குபஞ்சர் சிகிச்சைக்கு அழைத்து செல்கின்றனர். இதன் மூலம் பிராணிகளின் உடலில் ஏற்படும் கட்டிகள் அறுவை சிகிச்சை ஏதும் இல்லாமல் குணப்படுத்தப்படுகின்றன.

விலங்குகள் சுகாதார மையத்தில் அக்குபஞ்சர் சிகிச்சையில் பிரபலமான மருத்துவர் ஜின் ரிஷன் கூறுகையில், ‘இந்த சிகிச்சை தொடங்கிய நான்கு வருடத்தில் 2 ஆயிரம் பூனை மற்றும் நாய்கள் வந்துள்ளன. மேலும் நடக்க முடியாத நாய்கள் கூட இந்த சிகிச்சையின் மூலம் நடக்க வைக்கப்படுகின்றன’ என்கிறார்.

error: Content is protected !!