சீனாவின் தேசிய தினம் – கோலாகல கொண்டாட்டம்!

சீனாவின் தேசிய தினம் – கோலாகல கொண்டாட்டம்!

சீனா கம்யூனிச அரசு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கலைநிகழ்ச்சி களுடன் களைகட்டியுள்ளன.

சீனாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் 70வது ஆண்டுகள் ஆகிறது. பொருளாதாரத்  தில் மிகவும் நலிவுற்று பின்தங்கியிருந்த சீன நாடு, கம்யூனிச புரட்சிக்கு பின், கடந்த 70 ஆண்டு களாக வளர்ச்சியடைந்து, தற்போது மிகப்பெரிய வல்லரசு நாடாக உருவாகியுள்ளது. இதை ஒட்டி தியானன்மென் சதுக்கத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை நேரில் காண, சுமார் ஒரு லட்சம் மக்கள் சீனக்கொடிகளுடன் திரண்டிருந்தனர். விழா தொடங்கியதும், 70 துப்பாக்கி குண்டுகள் முழங்க, 5 நட்சத்திரத்துடன் கூடிய செந்நிற சீன கொடி, கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டு, சீன கீதம் பாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சீன புரட்சியின் போது, உயிர் நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. அதன்பின்னர் சிறப்புரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனாவில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும் தேசிய தின வாழ்த்துக்களை கூறினார்.

பின்னர் சீனா கம்யூனிச அரசு உருவாக உறுதுணையாக இருந்த வெளிநாடுகளில் வாழும் சீன மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதிபரின் உரையை அடுத்து, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இருபிரிவுகளாக சுமார் 80 நிமிடங்கள் நடந்த கண்கவர் ராணுவ அணிவகுப்பை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை முடிந்ததும், ராணுவ தளவாடங்களின் பெருமையை மக்களுக்கு பறைசாற்ற பீரங்கிகள், வானூர்தி, சிறிய தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட அணிவகுத்து சென்றன. விமானப்படை மற்றும் காலாட்படைகளின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அணிவகுப்பு நிகழ்ச்சியில், சிறிய, நடுத்தர ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் தாவும் மிக நீண்ட Dongfeng-41 ஏவுகணைகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன.

முன்னதாக சீனாவின் தேசிய தினம் ஹாங்காங்கிலும் கொண்டாடப்பட்டது. ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை பூட்டப்பட்ட உள்ளரங்கில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சீனக்கொடியுடன் தேசிய தினத்தை கொண்டாடினர். தொடர் போராட்டம் எச்சரிப்பை அடுத்து, ஹாங்காங் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிக்ழ்ச்சியின் முன்பும் பின்பும் எந்தவித அசம்பாவித நிகழ்வும் நடக்காதவண்ணம் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆளில்லா குட்டி விமானங்கள், காத்தாடிகள் மற்றும் பந்தய புறாக்கள் உள்ளிட்டவற்றை பறக்கவிட கடந்த 15 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முக்கிய சாலைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராணுவ அணிவகுப்பு நடக்கும் தியனன்மென் சதுக்கத்தை கடந்து செல்லும் சுரங்க பாதையும் மூடப் பட்டுள்ளது. இணையதள வசதியும் முடக்கப்பட்டுள்ளதால் கூகிள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!