நக்சல்கள் நிறைந்த சத்தீஸ்கரில் பெண் கமாண்டோக்கள் நியமனம்! – AanthaiReporter.Com

நக்சல்கள் நிறைந்த சத்தீஸ்கரில் பெண் கமாண்டோக்கள் நியமனம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் உள்ள இடங்களில் 30 பேர் கொண்ட பெண் கமாண்டோக் கள் முதல்முறையாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் மாவட்ட காவல் படையில் பெண் கமாண்டோக்களை சத்தீஸ்கர் போலீஸ் ஈடுபடுத்தியிருந்த நிலையில், மாவோயிஸ்ட்களுக்கு எதிரான தாக்குதல் படையில் தற்பொழுது பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சரணடைந்த பெண் நக்சல்கள் 4 பேர், இந்த பெண்கள் கமாண்டோ படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் கமாண்டோ குழுவிற்கு ‘தண்டேஷ்வரி பைட்டர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன், மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இளைஞர்கள் கொண்ட ‘பஸ்தாரியா பட்டாலியன்’ என்ற படையை மத்திய பாதுகாப்பு படை ஏற்படுத்தியிருந்தது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த 30 பெண்களே தற்போது, ‘தண்டேஷ்வரி பைட்டர்ஸ்’ குழுவில் இடம்பெற்றுள்ளனர்.