சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் இன்ஜினியர்களுக்கு வேலை! – AanthaiReporter.Com

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் இன்ஜினியர்களுக்கு வேலை!

மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் 1965ல் நிறுவப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், பின் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என பெயர் மாற்றம் பெற்றது. இதில் எட்டு பிரிவுகளில் காலியாக இருக்கும் 42 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: இன்ஜினியரிங் பிரிவிலான கெமிக்கலில் 21, மெக்கானிகலில் 9, எலக்ட்ரிகலில் 5, சிவிலில் 2, மெட்டலர்ஜியில் 1, ஐ.டி., அண்ட் எஸ்., ஆபிசர் பிரிவில் 1, எச்.ஆர்., பிரிவில் 2, சேப்டி ஆபிசர் பிரிவில் 1ம் காலி இடங்கள் உள்ளன.

வயது: 2018 செப்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். உச்சபட்ச வயதில் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து சில சலுகைகள் உள்ளன.

கல்வித் தகுதி: இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். ஐ.டி., அண்ட் எஸ்., பிரிவுக்கு இன்ஜினியரிங் பட்டத்தை கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் போன்ற பிரிவு ஒன்றில் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். எச்.ஆர் பிரிவுக்கு எம்.பி.ஏ., அல்லது இரண்டு வருட முதுநிலை டிப்ளமோ படிப்பு தேவைப்படும். சேப்டி ஆபிசர் பதவிக்கு இன்ஜினியரிங் பட்டப் படிப்புடன் இன்டஸ்ட்ரியல் சேப்டி பிரிவில் கூடுதல் தகுதி தேவைப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 500.

கடைசி நாள் 
: 2018 அக்., 8.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு