மெட்ரோ ரயில் ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்! – AanthaiReporter.Com

மெட்ரோ ரயில் ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் 7 ஊழியர்கள், பணியாளர் சங்கத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து 7 பேரையும் மெட்ரோ ரயில் நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இதைக்கண்டித்து கடந்த 3 நாட்களாக மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இப்போராட்டம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, மெட்ரோ நிர்வாகத்தினர், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து இன்று முதல் மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணிக்கு திரும்ப உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், பணிநீக்கம் செய்யப்பட்ட 7 பேர் நீதிமன்றத்தில் முறையிடுவார்கள் என தெரிவித்தார். தொழிலாளர் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்ததாக சவுந்தரராஜன் கூறினார்.

முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் அரசியல் கட்சிகளின் தலையீட் டால் பெரிது படுத்தப்பட்டாலும் சற்று அதிகரித்து வந்த நிலையில், ரயில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக பயணிகள் வரத்து குறையத்தொடங்கி இருந்தது.ஆனாலும்  மெட்ரோ ரயில் ஊழியர்களின் கோரிக்கை ஏற்க மறுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் முரண்டு பிடித்து வரும் நிலையில், இன்று மீண்டும் தமிழக தொழிலாளர் துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

நேற்று சென்னை குறளகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள், சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தையில், 8 பேர் பணிநீக்கத்தை ரத்து செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்தது. இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தை யிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால், தங்களது போராட்டம் தொடரும் என மெட்ரோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தென்னக ரயில்வே உள்பட பல மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ ஊழியர்கள் போராட்டமும் பொதுமக்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது..தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் அரசியல் கட்சியின் பின்புலத்தில் போராட்டம் நடத்தி வருவதால், வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் பணியில் நிர்வாகம் ஈடுபடத்தொடங்கினால், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வேலைவாய்ப்பும் பறிபோய்விடும்…..என்று சில பலர் முணுமுணுத்த நிலையில்தான்  சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.