சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! – AanthaiReporter.Com

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர்(கணக்கு), உதவியாளர்(டிஎம்எஸ்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant (Accounts) – 02 

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (DMS) – 01

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.கணினி பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயதுவரம்பு: 1 4.08.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.