பக்கத்து மாநிலங்களுக்கு பறந்து செல்லும் சென்னை இட்லிகள்…!

பக்கத்து மாநிலங்களுக்கு பறந்து செல்லும் சென்னை இட்லிகள்…!

நிறைய கிளைகள் கொண்ட ரெஸ்ட்டாரன்டுகள் நடத்துவோர்கள் பல புதிய தொழில் நுட்பங்களைக் கையாள்கின்ற னர். ஒரு இடத்தில் மாஸ்டர் கிச்சன் வைத்துக்கொண்டு எல்லா கிளைகளுக்கும் தேவையான சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் போன்றவற்றை செய்துவிட்டு வண்டிகள் மூலம் அவர்களது கிளைகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் ரெண்டு விஷயம் அவர்களுக்குஉபோயகமாக உள்ளது. ஒன்று எல்லா கிளைகளிலும் ஒரேமாதிரியான டேஸ்ட் கொண்ட உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இன்னொன்று மேன்பவர், அதாவது ஆட்குறைப்பு. மேன் பவரை குறைப்பதற்காக பல விஷயங்கள் இவர்கள் கையாள்வது ஒருபக்கம் சிக்கன நடவடிக்கை என்றாலும் கூட இதுபோன்ற வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பது இந்த ஹோட்டல் இன்டஸ்ட்ரியை பொருத்தவரை இருந்துகொண்டேதான் இருக்கின்றது.

இட்லி மாவு அரைக்க அரவை மாஸ்டர்கள் வைத்தால் அவர்களுக்கு மாதச்சம்பளம் 15 லேந்து 18ஆயிரம் வரை கொடுத்து தங்குமிடம், உணவு போன்ற எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து தரவேண்டும். அரவை மாஸ்டர் ஓரிடத்தில் தொடர்ந்து பணிசெய்யவார் என்பதும் நிச்சயம் இல்லை. அவர் போய்விட்டால் வேறு அரவை மாஸ்டரை தேடவேண்டும். இதெல்லாம் அடிக்கடி ஏற்படும்பிரச்சனைகள்.இதுபோக, கிரைண்டர்கள் வாங்குவதற்கான முதலீடு, மின்சாரச் செலவு இவற்றை எல்லாம் கணக்குப்போட்டு பார்த்துவிட்டு மாவு தயாரிக்கும் சில நிறுவனங்களிடம் டைஅப் வைத்துக்கொண்டு இட்லி தோசைக்கான மாவினை பெற்றுக்கொண்டு இட்லி தயாரிக்கின்றனர்.. சமீப காலமாக சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்கள் இதனை பின்பற்றத் துவங்கிவிட்டனர். 25 கிலோ கொண்ட தோசை இட்லி மாவு பாலிதீன் கவரில் பேக் செய்யப்பட்டு இவர்களது உணவகங்களுக்கு மாவு தயாரிப்பவர்கள் சப்ளை செய்துவிடுகின்றார்கள். வேலை எளிதாகப் போய்விடுகின்றது.

இதற்கு அடுத்ததாக தற்போது இன்ஸ்டன்ட் ரெடி மேடு ஃபுட்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. சப்பாத்தி, பரோட்டா வரிசையில் தற்போது சாம்பார், காரக்குழம்பு, குருமா மற்றும் அசைவ குழம்புகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு அவை விற்பனைக்க வந்துவிட்டது. சப்பாத்தி அல்லது பரோட்டாவினை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் லேசாக சூடு செய்து சாப்பிடலாம். ஆனால்இந்த இரண்டுமே சில நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க இரசாயணங்கள் கலக்கப்ப டுகின்றது. இவைகளின் விலை சற்றே அதிகம் என்பதால் ஹோட்டல் தொழில் நடத்துபவர்கள் வாங்கு வதில்லை. அவசரத் தேவைக்கு சிலர் வாங்கிப்பயன்படுத்து கின்றனர். ஆனால் தொடர்ந்து இவைகளை வாங்கி உண்டால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்.

அடுத்ததாக தற்போது இட்லி தயாரிப்பிற்கென ஒரு தொழிற்சாலை சென்னையை அடுத்த மறைமலைநகரில் இயங்கி வருகின்றது என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். இங்கே ஒரு நாளைக்கு 25ஆயிரம் இட்லிகள் தயாரிக்கப்பட்டு உள்ளூர் உணவகங்கள் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் உள்ள ஹோட்டல்களுக்கும் சப்ளை செய்யப்படுகின்றது.40 கிராம் கொண்ட ஒரு இட்லியின் விலை 3 லேந்து மூன்றரை ரூபாய் மட்டுமே. விலை மலிவு. தரமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இட்லிகள். இந்த புது ட்ரென்ட் தற்போது நகரெங்கும் பிரபலமாகி உள்ளது. இதன் காரணமாக ஆர்டர்கள் இவர்களுக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. ஐடி கம்பெனிகள் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை இவர்களது கஸ்டமர்கள். இவர்கள் உணவகங்களில் ஆர்டர் எடுத்துவிட்டு ஒவ்வொரு நாளும் இந்த இட்லிகளை காலை 7 மணிக்குள்ளாக அனைத்து உணவகங்களுக்கும் சப்ளை செய்துவிடுகின்றார்கள்.

உணவகங்கள் அதற்கு தேவையான சட்னி சாம்பார் போன்றவற்றை ரெடிசெய்து கொள்ளவேண்டும். இவர்கள் இட்லிக்கான மாவு தயாரிப்பில் ரேஷன் அரிசி அறவே பயன்படுத்துவதில்லை. சுத்திகரிக்கப் பட்ட குடிநீரையே அரவைக்கு பயன்படுத்துகின்றனர். இட்லி உப்பலாக வர வேண்டும் என்பதற்காக மாவில் எந்த விதமான ரசாய னங்களையும் இவர்கள் கலப்பதில்லை. அதே நேரத்தில் இட்லி சுவையிலும் அளவிலும் சமரசம் செய்து கொள்வ தில்லை. முக்கியமாக இவர்களது தயாரிப்பு இட்லியை மூன்று நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும். சின்னக்குழந்தை களுக்கு கூட இவர்களது தயாரிப்பினை தரலாம். எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று கூறுகின்றனர் இதனைத்தயாரித்து விற்பவர்கள். வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டர்கள் செய்தாலும் டோர் டெலிவரி செய்து தருகின்றார்கள். மினிமம் க்வான்ட்டிட்டி ஆர்டர் என்ற ஒரு விஷயம் இதில் உண்டு..

இந்த இட்லி தயாரிப்பாளர்கள் தங்களது டிசைனிங் அனுபவத்தைக் கொண்டு இவர்களுக்காகவே இயந்திரத்தை வடிவமமைத்து, ஹைதரா பாத்திலிருந்து செய்து வாங்கியிருக்கின்றார்கள். இட்லி தவிர, மாவு விற்பனையும் இங்கே நடக்கிறது. இப்போது இவர்களது தயாரிப்பை முழுவதும் இயந்திர மயமாக்கியுள்ளார்கள்.சமீப நாட்களாக இந்த நிறுவனம் இட்லியில் புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக இவர்களை பலரிடம்அடையாளப்படுத்தி இருக்கின்றது. நலா என்கிற பெயரில் இட்லி தோசை மாவு இவர்கள் சப்ளை செய்கின்றார்கள். தற்போது மசாலா இட்லியை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இடியாப்பமும் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றது இந்த நிறுவனம். இதற்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது.

பொடி இட்லி, சில்லி இட்லி, சில்லி ப்ரை இட்லி என பல வெரைட்டிகளில் இப்போது தயாரித்து உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது..மூன்று சகோதரர்கள், அம்மா,அப்பா என ஒரு குடும்பமே இந்த தொழிற்சாலையில் மாறி மாறி தங்களது சக தொழிலாளர்களுடன் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றது. திருப்பூரில் ஏதோ ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றியபோது வேலையில் திருப்தி ஏற்படாத காரணத்தினால் இவர்களில் பாஸ்கர் என்பவருக்கு ஏற்பட்ட யோசனையின் காரணமாக உருவானது தான் இந்த இட்லி தொழிற்சாலை.

தற்போது இவர்களது இட்லிகள் விமானம் மூலம் மற்ற நகரங்களுக்கும் விடியற்காலை 4 மணிக்கு பறந்து கொண்டிருக்கின்றது.ஆனால் இவ்வளவு எளிதான பின்னரும் உணவுப்பண்டங்களின் விலையை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் இந்த பிரபல உணவகங்களுக்கு ஏற்படுவதேயில்லை. இவர்கள் இப்படி கஷ்டப்பட்டு மிகச் சிறிய அளவில் லாபம் வைத்து தயாரிக்கும் இட்லிகளை 3 ரூபாய்க்கு வாங்கி அதனோடு சட்னி, சாம்பாரைக் கொடுத்துவிட்டு இரண்டு இட்லிக்கு 33லேந்து 40 ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொள்கின்றனர் இந்த பிரபல ஹோட்டல்கள் நடத்துவோர்கள் என்பதைத்தான் நம்மால் ஜீரணிக்கமுடியவில்லை.

எது எப்படியோ இந்த நிறுவனத்தை நடத்துபவர்களின் முயற்சியையும் கடின உழைப்பையும் பாராட்டத்தான் வேண்டும்.

http://baradefluffies.com/products.html

தகவல் : உதய்

error: Content is protected !!