சென்னை மாவட்ட கோர்ட்-டுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்! – AanthaiReporter.Com

சென்னை மாவட்ட கோர்ட்-டுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்!

சென்னை மாவட்ட சிறு வழக்குகள் நீதி மன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 74 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: ஸ்டெனொகிராபரில் 7, டைப்பிஸ்டில் 9, ஜூனியர் ஹெல்ப்பரில் 6, சீனியர் அடிமின்(அமீனா)வில் 4, ஜூனியர் அட்மின்(அமீனா)வில் 6, பிராசஸ் சர்வரில் 3, ஆபிஸ் அஸிஸ்டெண்டில் 38, கார்டு பிரிவில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இது தவிர விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சில கட்டாயத் தேவைகளும் உள்ளன. ஸ்டெனோகிராபர் பதவிக்கு டைப்பிங் மற்றும் ஸ்டெனொகிராபி தேவைப்படும். முழுமையான தகுதி மற்றும் தேவைகளை பின்வரும் இணையதளத்திற்கு சென்று அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இடத்தில் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டி, சான்றிதழ் ஆவணங்களின் நகல்களில் சுய உறுதியளிக்கப்பட்டு, இதர தேவைகளுடன் பதிவுத்தபால் மூலமாக மட்டுமே பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று விபரங்களை முழுமையாக அறியவும்.

கடைசி நாள்: 8.3.2019 மாலை 5.45 மணி.

முகவரி: தலைமை நீதிபதி,
சிறுவழக்குகள் நீதிமன்றம்,
உயர் நீதிமன்ற வளாகம்,
சென்னை 600 104.

விபரங்களுக்கு: ஆந்தை ரிப்போர்டர் வேலைவாய்ப்பு