செல்ல பிராணிகளின் வளர்ப்பை பதிவு செய்ய ஆன் லைன் வசதி – சென்னை மாநகராட்சி ஏற்பாடு! – AanthaiReporter.Com

செல்ல பிராணிகளின் வளர்ப்பை பதிவு செய்ய ஆன் லைன் வசதி – சென்னை மாநகராட்சி ஏற்பாடு!

னித நேயம் ஒரு பக்கம் குறைந்து வருவதாகவும்,பெற்ற தாய், தந்தையை ஓல்ட் ஏஜ் ஹோமில் விடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பத்காகவும் சில பல தகவல்கள் வெளி வரும் சூழலில் வீடு களில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டிருக்கின்றன என்றும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் செல்லப்பிராணி களுக்காக ஒதுக்கப்படும் நேரமும் காட்டப்படும் அன்பும் அதிகமாக இருக்கிறது எனவும் ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. விலங்குகளை வீட்டில் வளர்க்கும்போது அவற்றின் நடத்தையையும் உணவு உள்ளிட்ட இயற்கைத் தேவைகளையும் மனிதன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டுமெனில், அதற்கு உள்ளாட்சி அமைப்பு களிடமிருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் வீட்டில் செல்ல பிராணிகளின் வளர்ப்பை பதிவு செய்து உரிமம் வாங்குவதை இனி ஆன் லைனிலேயே செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தை சென்னை மாநாகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் குறைந்து வரும் செல்லப் பிராணிகளின் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை பதிவு செய்ய நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, திரு விக நகர், மீனம்பாக்கம், புளியந்தோப்பு ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக ஆண்டுக்கு 50 ரூபாய் பதிவுக் கட்டணமும் வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி நோய்த் தடுப்பு ஊசி போடப்பட்டதற்கான கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். அந்த ஊசியின் விலை தனியார் கிளினிக்குகளில் 600- 700 ரூபாய் வரை ஆகும்.

செல்லப்பிராணியின் பெயர், நிறம், ப்ரீட், வயது, வளர்ப்பவரின் பெயர் மற்றும் முகவரி, நோய் பிரச்னை என அனைத்தையும் உரிமப் படிவத்தில் பதிவு செய்வது கட்டாயம். அதுமட்டுமன்றி நாய்க்கு எந்த நோய் பிரச்னைகளும் இல்லை என மருத்துவ சான்றிதழும் இணைக்க வேண்டும். இத்தனை வேலைகளை செய்து முடித்த பின்னரே செல்லப்பிராணியின் பதிவை உறுதி செய்ய முடியும். அதேபோல் ஒவ்வொரு வருடமும் நாய் வளர்ப்புக்கான உரிமத்தை புதுப்பித்தல் செய்வது கட்டாயம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டும் செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு 1200 ஆக இருந்தது. இந்த ஆண்டு வெறும் 800 பதிவுகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த காரணத்திற்காக ஆன்லைன் பதிவைக் கொண்டு வந்து உள்ளதாக கமால் ஹுசைன் (Kamaal Hussain) தெரிவித்துள்ளார். இவர் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் கால்நடை அதிகாரியாவார்.

”நாங்கள் சென்னையில் உள்ள நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் பாதிப்புகளை கண்காணித்துகொண்டே இருப்போம். அதுகுறித்த தகவல்களை சேகரித்து வைத்து அதற்கு ஏற்ப தக்க நடவடிக்கைகள், திட்டங்களை மேற்கொள்வோம். ஆனால் இப்படி பதிவுகள் குறையும்போது உரிய நடவடிக்கைகள் எடுப்பதில் சிக்கல் உண்டாகிறது. இது கால்நடைகளுக்கு மட்டுமல்ல மனிதர் களின் பாதுகாப்பிற்கும் நல்லது. இதுகுறித்த விழிப்புணர்வு போதாமல் இருப்பதே இந்த அலட்சி யத்திற்கான காரணமாக இருக்கிறது. இதை சரிசெய்யவே இந்த திட்டம்” எனவும் அதிகாரி கூறியுள்ளார்.