செக்கச் சிவந்த வானம் -விமர்சனம்!

செக்கச் சிவந்த வானம் -விமர்சனம்!

கோபால ரத்னம் சுப்பிரமணியம் என்ற பேரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது. ஆனால் மணி ரத்னம் என்று சொன்னதும் பலரின் நினைவுக்கு வருவது இருட்டு கலந்த புத்தம் புதிய காதல் காட்சி களும், சுருக்கமான வசனமும்தானே.? ,. இவரை ஒரு பிரச்சினைக்குரிய இயக்குராகவே திரை யுலகம் கண்டாலும் இவரது படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாத திரை ஓவியங்கள் என்றால் மிகையல்ல..ஆரம்பக் கட்டத்தில் அடுத்தடுத்து தோல்விப் படங்களைக் கொடுத்த மணி ரத்னம் மெளனராகம் மூலம் சினிமா ரசிகர்களின் மனசில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார். அதன் பின் ஏற்ற இறக்கங்களுடன் பயணித்த மணியின் சினிமா சாதனைகள் அத்தனையும் கடந்த ராவணன், கடல், ஓகே கண்மணி, காற்று வெளியிடை என்று நான்கு தொடர் தோல்விகளால் மறந்து போகும் அளவுக்கு போன நிலையில் ‘செக்கச் சிவந்த வானம்’ மூலம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்னரே தளபதி, நாயகன் என்று கேங்க் ஸ்டார் கதையுடன் ஹிட் படங்கள் மணிரத்னம், தற்போது கொஞ்சம் புது ஸ்டைலில் இந்த கேங்க்ஸ்டார் கதையை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக ஓரிரு வரி வசன பாணியை கை விட்டு விட்டு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் நகைச் சுவையும் கலந்த டயலாக்குடன் முழு ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என அத்தனை கமர்ஷியல் சமாச் சாரங்களையும் கலந்து இப்படத்தின் திரைக்கதையை மணிரத்னம் அமைத்து அப்ளாஸ் வாங்கி இருக்கிறார்.

கதையை பற்றி சொல்லப் போனால் சென்னையில் மரியாதை மிக்க பெரிய டானாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவருக்கு அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு ஆகிய மூன்று பிள்ளைகள். ஒரு மகளும் உண்டு. இதில் மூத்தவர் அரவிந்த்சாமி, அப்பா சொல்லும் வேலையை செய்வதோடு, அப்பாவைப் போலவே அடி தடி என்று வாழ்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய், துபாயில் இலங்கையை சேர்ந்த காதல் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் & குழந்தைகளுடன் செட்டில் ஆகி., ஷேக்குகளுடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்து பிழைப்போட்டி வருகிறார். மூன்றாவது மகன் சிம்பு செர்பிய நாட்டில் காதலியுடன் கள்ளச்சந்தையில், துப்பாக்கிகளை வாங்கி விற்று வருமானம் பார்த்து வருகிறார்.

இதனிடையே சென்னையை கலக்கும் பிரகாஷ் ராஜ்க்கும், அவருக்கு போட்டி தாதாவான தியாக ராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வரும் சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் மனைவி யுடன் காரில் கோயிலுக்கு சென்று திரும்பும் போது, அவர் காருக்குள் வெடிகுண்டு வீசப்படுகிறது. இதில் உயிர் பிழைத்து தீவிர சிகிச்சை பிரிவில் பிரகாஷ்ராஜும், ஜெயசுதாவும் அனுமதிக்கப் படுகிறார்கள்.

இதை கேள்விப்பட்டு பதரி அடித்த படி அருண் விஜய்யும், சிம்புவும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வருகிறார்கள். இங்கு அந்த மகன்கள் மூன்று பேரும், அப்பாவின் இந்த நிலைக்கு யார் காரணம்? யார் காரணம்? என்று அலசி ஆராய்கிறார்கள். கூடவே அரவிந்தசாமியின் பால்ய கால நண்பரும் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருமான விஜய் சேதுபதி துணையுடன் துப்பறிந்த போது. எதிராளி தியாகராஜன்தான் காரணம் என நினைத்து என அவர் மருமகனை போட்டுத் தள்ளி விடுகிறார்கள். ஆனால் சம்பவத்திற்குக் காரணம் அவர் இல்லை எனத் தெரிந் ததும், நொந்து போய் விடுகிறார்கள். இதனிடையே சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரகாஷ் ராஜ்., திடீர் நெஞ்சுவலியால் உயிரிழக்கிறார். அதை அடுத்து அவருடைய டான் போஸ்ட்டுக்கு யார் வருவது? என்று மகன்கள் மூன்று பேருக்குமிடையில் போட்டி ஏற்படுகிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

சிம்பிளாக சொல்வதானால் படம் முழுக்க, துரோகமும் – அதிகாரத்தையும், பணபலத்தையும் கைப்பற்றப் போட்டா போட்டியும், அதற்காக சொந்த அண்ணன் தம்பி என்று கூட பார்க்காமல் ஒவ்வொருவரும் எது வரை வேண்டுமானாலும் செல்வதும், எதை வேண்டுமானாலும் செய்வதை யும் நம்பகத்தன்மையுடன் சொல்கிறது திரைக்கதை.

இக்கதைக்காக அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என 4 நடிகர்களை கமிட் செய்து இவர்கள் அத்தனை பேருக்கும் சரி சமமான கேரக்டராக கொடுத்து அதையும் ரசிகனும் புரிந்து கொள்ளும் விதத்தில் வெற்றிக்கரமாக அமைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அப்படியான வித்தையை மணிரத்னத்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று நிரூபித்து இருக்கிறார்.

ஆனாலும் 4 கதாபாத்திரங்களில் கை ஓங்கி நிற்பது அரவிந்த் சாமிக்குதான், முரட்டு டான் அப்பா சொல்வதை மட்டுமே கேட்டு சுதந்திரம் என்றே இல்லாமல் அடிதடி என்று  வாழ்க்கையை ஓட்டுகிறார். பின்னாளில் அவர் அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவதும், அதற்கான அண்டர் கிரவுண்ட் விஷயங்களை மேற்கொள்வது, அதனால் நிகழும் இழப்பு, சோகம், வருத்தம் என எக்ஸ்ட்ரா ஸ்கோர் செய்கின்றார்.

அருண் விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கின்றார், இவரை வைத்து எத்தனை பெரிய ஆக்‌ஷன் காட்சிகளையும் அசால்ட்டாக எடுத்துவிடலாம், அதிலும் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பிரமிப்பு.

சிம்பு கடைக்குட்டி, அண்ணனால் தனக்கு ஒரு வலை சுற்றப்படுகின்றது என அறிந்து அவர் ஒரு கேங்கை தேற்றி களத்தில் இறங்குகின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இருமா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்.

விஜய் சேதுபதி அட மணிரத்னம் படத்தில் மீண்டும் ஒரு வைலன்ஸ் சைட் மௌனராகம் கார்த்திக் என்றே சொல்லலாம். அவருக்கே உரிய ஸ்டைலில் வசனத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்ஸர் தான், கடைசி வரை ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்று ஆடியன்ஸ் கேட்கும்படியே அவர் கதாபாத்திரம் கொண்டு போனது ரசிக்க வைக்கின்றது.

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என 4 நடிகர்களை வைத்து இவர்கள் அனைவருக்கும் சரியான கதாபாத்திரம் கொடுத்து அதை வெற்றிக்கரமாக முடிப்பது சாதாரண விஷயமில்லை. அப்படி ஒரு விஷயத்தை மணிரத்னத்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று இந்த வயதில் நிரூபித்து நிமிர்ந்து நிற்கின்றார்.

அரவிந்த்சாமி படத்தின் 4 கதாபாத்திரங்களில் கை ஓங்கி நிற்பது இவருக்கு தான், முரடன் அப்பா சொல்வதை மட்டுமே கேட்டு சுதந்திரம் என்றே இல்லாமல் அடிதடி என்றே வாழ்க்கையை ஓட்டுகின்றார். அவர் அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவது, அதற்கான விஷயங்களை மேற்கொள்வது, அதன் இழப்பு, சோகம், வருத்தம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.

வெளிநாட்டு ஜாலி பறவைகளாக அருண்விஜய், சிம்பு. எல்லோருக்கும் ஒரே நோக்கம் பிரகாஷ்ராஜ் இடத்திற்கு யார் வருவது என்பது தான், அருண் விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கின்றார், இவரை வைத்து எத்தனை பெரிய ஆக்‌ஷன் காட்சிகளையும் அசால்ட்டாக எடுத்துவிடலாம், அதிலும் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பிரமிப்பு.

நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, சிம்புவை பிடிக்கா தவர்களுக்கு கூட இந்த படத்தை பார்த்தால் அவரை பிடித்து விடும். “ஹூம்.. நான் யார் மீது அன்பு வைத்தாலும் பிரிந்துவிடுகிறார்கள், அதனால் தான் விலகியே இருக்கேன்” என்று வசனம் பேசி கை தட்டல் வாங்குகிறார். தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இரும்மா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்.

விஜய் சேதுபதி அட மணிரத்னம் படத்தில் மீண்டும் ஒரு வைலன்ஸ் சைட் மௌனராகம் கார்த்திக் என்றே சொல்லலாம். அவருக்கே உரிய ஸ்டைலில் வசனத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்ஸர் தான், கிரேட் டைரக்டர் படத்திற்காக தன்னை எந்த விதத்திலும் மாற்றிக்கொள்ளாமல், தனது பாணியிலேயே அசத்தியிருக்கிறார். ஆரம்பக் காட்சியில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசுவது முதல், சிம்பு, அருண் விஜய், அரவிந்த்சாமி என அனைத்து கதாபாத்திரங்களுடன் பயணிப்பது என்று, தான் வரும் இடங்களில் எல்லாம், தனது டைமிங் டயலாக் டெலிவரியால் சிரிக்க வைக்கிறார். அதிலும் கடைசி வரை ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்று ஆடியன்ஸ் கேட்கும்படியே அவர் கதாபாத்திரம் கொண்டு போனது ரசிக்க வைக்கின்றது.

படத்தின் ஐந்தாவது ஹீரோ ரகுமான் தான், பாடல்கள் மாண்டேஜாக வந்தாலும், பின்னணியில் படத்தை தூக்கி வேற லெவலுக்கு கொண்டு செல்கின்றார். அதேபோல் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பல இடங்களை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது.

மொத்தத்தில் செக்கச் சிவந்த வானம் – பார்க்க வேண்டிய சினிமா

மார்க் 3.75 / 5

error: Content is protected !!