ஐசிசிஐ பேங்க் சி ஈ ஓ சந்தா கோச்சார் ராஜினாமா ஏற்பு! – AanthaiReporter.Com

ஐசிசிஐ பேங்க் சி ஈ ஓ சந்தா கோச்சார் ராஜினாமா ஏற்பு!

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார்  வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் புகார் எழுந்தத சர்ச்சையை அடுத்து தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சாரின் கணவர், வீடியோகான் குழுமத்துடன் இணைந்து தொழில் புரிந்துள்ளார். அதனால்  சந்தா கோச்சார், கடந்த 2012 ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 250 கோடி ருபாய் கடன் வழங்கினார். இதில், சாந்தா கோச்சார் குடும்பம்தான் பெரும் ஆதாயம் அடைந்திருப்பதாக இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கவுன்சில் குற்றம் சாட்டியது.

இதனை தொடர்ந்து சந்தா கோச்சார் மீது விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதன் காரணமாக சிபிஐ சில மாதங்களுக்கு முன் ஆரம்பக் கட்ட விசாரணையை துவங்கியது. இதனையடுத்து, சந்தா கோச்சார் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஐசிஐசிஐ நிர்வாகம், சந்தீப் பக்ஷி என்பவரை நிர்வாக இயக்குநர் மற்றும் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.