காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம்! – AanthaiReporter.Com

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம்!

தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்பாதல், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதே சமயம் இது குறித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்பட சிலா அமைச்சர்கள் அளித்த பேட்டியின் போது, சுப்ரீம் கோர்ட் கூறியதுபோல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்போம்’ என்று சொல்லி வந்த நிலையில் \காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மொத்தம் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவர்.காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

அண்மையில் வெளியான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் தமிழ்நாட்டுக்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலாவது, அந்த தண்ணீராவது கிடைக் கும் என்ற நிலை உருவானது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. மத்திய அரசு 4 மாநிலங்களின் ஆலோசனை கூட்டத்தை டெல்லியில் கடந்த 9-ந் தேதி கூட்டி ஆலோசனை நடத்தியது. அதிலும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் விதித்த காலக்கெடு, இன்னும் 4 நாட்களில், அதாவது 29-ந் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு கைவிரித்து விட்டு, அதற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க முடிவு செய்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒரு குறிப்பினை தயார் செய்து மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்ப உள்ளது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிடுவது பற்றி வலியுறுத்தப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது