மறக்க முடியுமா – Page 2 – AanthaiReporter.Com

மறக்க முடியுமா

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்!

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்!

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டை மலை சீனிவாசன். குறிப்பாக லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு, 5ம் ஜார்ஜ் மன்னரிடம் கை கொடுக்காமல், நான் தீண்டத்தகாதவன். பறையன் என்று சொல்லி அதிர வைத்தவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன். சென்னை அடுத்து...
‘தினமலர்’ பத்திரிக்கைக்கு பிறந்த நாள்!

‘தினமலர்’ பத்திரிக்கைக்கு பிறந்த நாள்!

தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.,) திருவனந்தபுரத்தில் தினமலர் நாளிதழ் துவங்கியதற்கு ஒரு கொள்கையும், லட்சியமும் இருந்தது. சுதந்திரம் பெற்ற பின்பு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த, பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் நாஞ்சில் நாட்டை (இன்றைய குமரி மாவட்டம்) தாய் தமிழகத்தோடு ...
திருமுருக கிருபானந்த வாரியார்!

திருமுருக கிருபானந்த வாரியார்!

திருமுருக கிருபானந்த வாரியார். இந்தப் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அழகான தமிழும், தமிழோடு இணைந்த பக்தியும் ஓர் உருவமாக உள்ளத்தில் தோன்றும். திரு செல்வம், முருக அழகு, கிருபா கருணை, ஆனந்தம் - மகிழ்ச்சி, வாரி பொழிபவர். தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற் ...
இஸ்மத் சுக்தாய் – உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர்

இஸ்மத் சுக்தாய் – உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர்

இந்தியாவில் பி.ஏ பட்டமும், கல்வியியல் பட்டமும் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் ஆவார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் என்னும் சிறு நகரத்தில் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 பிறந்தவர் இந்த இஸ்மத் சுக்தாய், தனக்கு 13 வயதில் நடக்க இருந்த திருமணத்தில் இருந்து புத்தி சாலித்தனமாக வெளியில் வந்து படிப்பில் கவன...
ஒற்றை ஆளாய் ஒரு மலையை பிளந்தவர் -தசரத் மான்ஜி !

ஒற்றை ஆளாய் ஒரு மலையை பிளந்தவர் -தசரத் மான்ஜி !

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூரைச் சேர்ந்த நிலமில்லாத விவசாயக் கூலி தசரத் மான்ஜி. 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி 'பால்குனி தேவி', மலையின் மறுபக்கத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார்.அம்மலைச் சிற்றூர்களில் அவசர உதவி...
ராமகிருஷ்ண பரமஹம்சர்!

ராமகிருஷ்ண பரமஹம்சர்!

நம்ம இந்தியா உலகப் புகழ் பெறுவதற்குக் காரணம் தாஜ்மஹால் போன்ற சிறந்த கட்டடங்கள் மட்டும் அல்ல, இமய மலையும் கங்கையாறும் சென்னைக் கடற்கரை போன்ற இயற்கைப் பெருமைகள் மட்டும் அல்ல. பல நுாற்றாண்டுகளாக இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து புகழொளி பரப்பி வரும் பெருமக்களே காரணம்.உண்மையை ஆராய்ந்தால், இயற்கைப் ப...
உலக யானைகள் தினம்!

உலக யானைகள் தினம்!

உலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ல் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாது ப் காப்பதும...
உலக சிங்கங்கள் தினம்!

உலக சிங்கங்கள் தினம்!

ஒரு புலி காப்பாற்றப்படும்போது, அது சராசரியாக வாழும் 40 சதுர கிலோ மீட்டர் காடு மறை முகமாக காப்பாற்றப்படுகிறது. அதனுடன் அதன் இரை விலங்குகள் உயிர் வாழ தேவையான நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சதுர பரப்புள்ள காடுகளின் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. இதனால் காடுகளில் பெய்யும் மழையை தாங்கி பிடித்து ப...
“சின்னப் பையனும் – குண்டு மனிதனும்” – கட்டிங் கண்ணையாவின் டைரிக் குறிப்பு!

“சின்னப் பையனும் – குண்டு மனிதனும்” – கட்டிங் கண்ணையாவின் டைரிக் குறிப்பு!

இன்றிலிருந்து 73 ஆண்டுகளுக்கு முன் 1945 இல் இதே நாளில் நாகசாகியில் குண்டு மனிதனால் (fat man) பல்லாயிரக்கணக்கான மக்கள் துடி துடித்து இறந்த நாள். யார் இந்த குண்டு மனிதன்? இது அமெரிக்கா நாகசாகியின் மீது போட்ட அணு குண்டின் பெயர்தான் அது!. ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா- நாகசாகி நகரங்கள் மீது 1945 ஆம் ஆண்டு அமெர...
தமிழகத்து நிஜ வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்!

தமிழகத்து நிஜ வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்!

காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர், ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும், தானியமும் வசூலித்துக் கொண்டுபோனபோது, அதைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை ப...
உலகக் கல்லீரல் அழற்சி நாள் – வேர்ல்ட் ஹெப்படைட்டிஸ் டே

உலகக் கல்லீரல் அழற்சி நாள் – வேர்ல்ட் ஹெப்படைட்டிஸ் டே

உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப் படுகிறது. ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று அவரது நினைவாக இத்தினத்தை தேர்ந்தெடுத்தார்கள். கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறை...
கார்கில் போர் வெற்றி தினம்: இன்று கொண்டாட்டம்!

கார்கில் போர் வெற்றி தினம்: இன்று கொண்டாட்டம்!

1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமா...
‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்

‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்

சென்னை மாகாணம் (Madras State) எனும் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சங்கரலிங்கனார் விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலை 27, 1956இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். அண்ணா, ம.பொ.சி., ஜீவா, கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனார் சந்தித்து, உண்ணா நோன்ப...
வேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள்!

வேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள்!

வேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படும். உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் திகழ்கிறது. சர்வதேச அளவில் ஜனத்தொகை வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருக...
மாதவிடாய் சுகாதார நாள்!

மாதவிடாய் சுகாதார நாள்!

ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மாதவிடாய் என்பது 28 நாட்கள் இடைவெளியில் ஐந்து நாட்கள் ரத்தப்போக்குடன் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவதற்காக ‘28/5’ என்ற தேதி இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாளில், மாதவிடாயின் போது எப்ப...
தமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில்ஒருவர் புலவர் கு.கலியபெருமாள்.

தமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில்ஒருவர் புலவர் கு.கலியபெருமாள்.

தமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில் ஒருவர் புலவர் கு.கலியபெருமாள். . ஆரம்பத்தில் பெரியார் ஆதரவாளராக இருந்து, பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிர்சங்க தலைவராகினார். தொழிற்சங்க பொறுப்பு வகித்த காலத்தில் முதலாளி வர்க்கத்தின் மீது ஏற்பட்ட நேரடி காழ்ப்புணர்ச்சி அவரை நக்சல்பாரியாக உரு...
தமிழ் பத்திரிகையுலகில் புரட்சியை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார்!

தமிழ் பத்திரிகையுலகில் புரட்சியை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார்!

தமிழகத்தில் பிறந்தவர்கள் அல்லது வாழ்பவர்கள் தமிழராக இல்லாவிட்டாலும் தினத்தந்தியைப் படிக்காமல் வளர்ந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை உருவாகக் காரணமாக இருந்தவர் சி.பா.ஆதித்தனார். சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனார் - சி.பா.ஆதித்தனாரின் முழுப் பெயர் இதுதான். தூத்துக்குடி மாவட்டத...
டெல்லி செங்கோட்டைக்கு ஹேப்பி பர்த் டே!

டெல்லி செங்கோட்டைக்கு ஹேப்பி பர்த் டே!

முன்னொரு காலத்தில் இந்த பாரத்தை ஆண்டு வந்த முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கி 1648-ம் ஆண்டு மே மாதம் 12-ல் இந்தக்கோட்டையை கட்டி முடிச்சார். இந்த செங்கோட்டை உண்மையில், "குயிலா-ஐ-முபாரக்" (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரசக் குடும...
உலக செவிலியர் தினம்!

உலக செவிலியர் தினம்!

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நர்சுகள் என்று பெரும்பாலானோரால் சொல்லப்படும் செவிலியர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. இன்னும் சொல்லப் போனால் செவிலியர் பணி என்பது தொழில் அல்ல... தொண்டு. ஊதியத்த...
நாட்டிய தாரகை மிருணாளினி சாராபாய்!

நாட்டிய தாரகை மிருணாளினி சாராபாய்!

இன்றைய கூகுள் டூடுளில் சிறப்பித்துள்ள மிருணாளினி சாராபாய் இதே மே மாதம் 11, 1918 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்தார். இவர் ``உங்களால் மூச்சுவிடாமல் இருப்பதைப் பற்றி யோசிக்க முடியுமா... எனக்கு நாட்டியம் அப்படித்தான்'' என்று நாட்டியத்தின் மீதான தன் காதலை வெளிப்படுத்திய மிருணாளினிக்கு இன்னிக்கு 100 வயசு. ...