தமிழகம் – AanthaiReporter.Com

தமிழகம்

கர்நாடக முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்

கர்நாடக முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டுமென கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின...
குறுவைக்கு தண்ணீர் திறக்காத வழியில்லை: இதில் வெற்றி விழா ஒரு கேடு!

குறுவைக்கு தண்ணீர் திறக்காத வழியில்லை: இதில் வெற்றி விழா ஒரு கேடு!

குறுவை சாகுபடிக்கு கர்நாடகம் தண்ணீர் தராத நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெற்றி விழா நடத்துவதா? என காவிரி உரிமை மீட்புக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய பேரியக்க தலைவருமான மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவில் சேருவார்களா?

அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவில் சேருவார்களா?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உண்மையான அன்பு இருப்பவர்களாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வதில் எங்களுக்குள் எந்த தயக்கமும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார். அதிமுகவில் தகுதி நீக்கம் ...
கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஆறு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மடிகேரி, குடகு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடகத்தின் கபினி அணைக்கு நீர்வரத்த...
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது: ஐகோர்ட்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது: ஐகோர்ட்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்ய கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு ...
முதல்வர் நாராயணசாமி தகவல் – அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்பு

முதல்வர் நாராயணசாமி தகவல் – அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்பு

''அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதியம் உணவில், வழக்கமான சாதத்திற்கு பதிலாக, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்'' என, முதல்வர் நாராயணசாமி தெருவிதுள்ளார். புதுச்சேரி, திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு, வேர்ல்புல் ந...
பெரும் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்க போலீசார் தடை உத்தரவு

பெரும் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்க போலீசார் தடை உத்தரவு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  குற்றாலம், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் வேகம் மிக அதிகளவில் இருப்பதால் பாதுகாப்பு கருதி சு...
மாதிரி சட்டப்பேரவை! – அண்ணா அறிவாலயத்தில் அரங்கேற்றம்!

மாதிரி சட்டப்பேரவை! – அண்ணா அறிவாலயத்தில் அரங்கேற்றம்!

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை நேற்று காலை மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக த...
சிவகங்கையில் ஜாதி மோதல் : இருவர் பலி- பதட்டம் தொடர்கிறது!

சிவகங்கையில் ஜாதி மோதல் : இருவர் பலி- பதட்டம் தொடர்கிறது!

மிகவும் வளர்ந்து விட்டதாக பீற்றிக் கொள்ளும் தமிழகத்தில் இன்றளவும் ஜாதிக் கலவரங்கள் நடப்பது தொடர்கதையாகி விட்டது. பகுத்தறிவை வளர்ப்பதாக ஒரு சாரார் சொல்லி வந்தாலும், ஜாதி வேற்றுமையை ஒழிப்பதாக இன்னோர் தரப்பு முழக்கமிட்டாலும் சில ஜாதியினர் தங்கள் கணில் கூட படக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி  அறிக்கை முழு விபரம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை முழு விபரம்!

100வது நாள் போராட்டத்தின் போது 13 உயிர் பலி நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி விரிவான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின்னர், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்...
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது!

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது!

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு  அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை வெளி டப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா, தூத்துக்குடி சார் ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் முன்னிலையி...
ஜெயலலிதா ஆடியோவை ரிலீஸ் செய்து தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்புவதா? -ஸ்டாலின்

ஜெயலலிதா ஆடியோவை ரிலீஸ் செய்து தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்புவதா? -ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் நேற்று (மே 26) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “13 பேரைச் சுட்டு தள்ளியுள்ளது இந்த ஆட்சி. இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை திசை திருப்புவதற்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை ஆட்சியாளர்கள் பயன்...
தென்மேற்கு பருவக் காற்று வீச ஆரம்பிச்சாச்சு.. இந்தாண்டு மழை வெளுத்துக் கட்டுமாம்!

தென்மேற்கு பருவக் காற்று வீச ஆரம்பிச்சாச்சு.. இந்தாண்டு மழை வெளுத்துக் கட்டுமாம்!

வருஷா வருஷம் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். நாட்டின் பெரும்பாலான பாசன நிலங்கள் இந்த மழையால்தான் பயன் அடைகின்றன. இந்நிலையில் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. ஆம்.. தற்போது குமரிக் கடல், மாலத்தீவு பகுதிகள், தெற்கு வங்கக் கடலில் சில பகுதிகள...
எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்த மாவீரன் குரு மறைந்தார்! – ராமதாஸ் வேதனை

எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்த மாவீரன் குரு மறைந்தார்! – ராமதாஸ் வேதனை

தமிழகத்தின் தனிப் பெரும் இயக்கமான பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சற்று முன் உயிரிழந்தார். வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு. வன்ன...
தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை! – கலெக்டர் நத்தூரி திட்டவட்டம்!

தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை! – கலெக்டர் நத்தூரி திட்டவட்டம்!

இந்தத் தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை: தூத்துக்குடி மக்கள், பொது அமைப்புகள் எல்லாம் கருத்தை உறுதியாகத் தெரிவித்தனர். மக்களின் உணர்வை ஏற்றுக்கொண்ட மாநில அரசும் இக்கருத்தில் உறுதியாக இருப்பதாக செயதியாளர்களிடம் வியாழனன்று மாலை மாவட்ட ஆட்சியர் நந்தூரி தெரிவித்தார்.     ...
என்னை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையா? எடப்பாடி விளக்கம்!

என்னை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையா? எடப்பாடி விளக்கம்!

சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த ஆய்வு குழு கூட்டம் முடிந்தபின் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சபாநாயகர் அறையில் 11மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்குழு கூட்...
சென்னை மெட்ரோ ரயிலில் மேலும்  இரு புதிய வழித்தடச் சேவை – தொடக்கம்!

சென்னை மெட்ரோ ரயிலில் மேலும் இரு புதிய வழித்தடச் சேவை – தொடக்கம்!

சென்னையில் மேலும் இரண்டு புதிய வழித் தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வருகிற மே.25-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதையொட்டி நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர் (வெள்ளிகிழமை) கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். விழா...
ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமானது: போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!

ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமானது: போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் போராட்டம் 100வது நாளாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்ல...
தமிழகத்தில் நிபா வைரஸ் நோய் வரவில்லை- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் நிபா வைரஸ் நோய் வரவில்லை- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

நாட்டில் அவ்வ்ப்போது புதிய வகை நோய் பரவி கொத்து கொத்தாக ஜனங்களை பலியாக்குவது தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் எய்ட்ஸ், ஸ்வைன் ஃபுளூ, பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தொடர்ந்து தற்போது நிபா என்ற வைரஸ் மூலம் கேரளாவில் ஒருவகையான மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் கா...
வளைகுடா பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சாகர்’ புயலாக மாறியது: ஆனாலும் தமிழகத்தில் நோ மழை!.

வளைகுடா பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சாகர்’ புயலாக மாறியது: ஆனாலும் தமிழகத்தில் நோ மழை!.

ஹாட்-டான வெயிலின் வெப்பத்திற்கு இடையே  அரபிக் கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சாகர்’ புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குந...