ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய முடியாது! – AanthaiReporter.Com

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய முடியாது!

கடந்த 1991 ம் வருஷம் மே 21 ஆம் தேதி நடந்த ஒரு தேர்தல் பொதுகூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) அமைப்பை சேர்ந்த பெண் நடத்திய தற்கொலை தாக்குதலின் மூலம் முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பந்தமாக நடைபெற்ற விசாரணையின் இறுதி தீர்ப்பு 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உட்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததன் மூலம் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த ஏழு பேரும் கிட்டத்தட்ட் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் அவர்களை விடுதலை செய்ய மாநிலக அரசுக்கு உரிமை இல்லை, மத்திய அரசுக்கு மட்டும் உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஏழு பேரின் விடுதலை குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு, அவர்களை விடுதலை செய்ய முடியாது. நாட்டின் பிரதமரை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்தால், அது சர்வதேச ரீதியாகவும், அபாயகரமான செயலுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடும். இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தெளிவுபடுத்தப் பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.

அதாவது மத்திய அரசின் சார்பிலான விளக்க அறிக்கையை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் தாக்கல் செய்தார். அதில் ‘‘ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்து ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். இதை ஏற்க முடியாது.
அவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு சிபிஐ தரப்பில் ஏற்கெனவே எதிரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை யின் போது,பெண் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பலர் போலீஸார் இறந்தனர். இந்த வழக்கில் வெளிநாட்டினர் உள்ளிட்டவர் களுக்கும் தொடர்பு இருப்பதை நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு ஏற்க்கத்தக்கல்ல. எனவே மற்ற பல வழக்குகளை, இதனுடன் ஒப்பிட முடியாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வாதங்களை ஏற்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.