கேன்பின் ஹோம்ஸில் வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com

கேன்பின் ஹோம்ஸில் வேலை வாய்ப்பு!

பொதுத் துறை வங்கிகளில் முக்கிய மான ஒன்றான கனரா வங்கியின், வீட்டு வசதி கடன் பிரிவிற்கான நிறுவனம் கேன்பின் ஹோம்ஸ். இது வீட்டு வசதி கடன் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்கு வர்த்தகத்தை கொண்டுள்ளது. இதில் 49 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

வயது: விண்ணப்பதாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாக தேவைப்படும்.

ஊதியம் எப்படி: முதல் வருடத்தில் மாதம் ரூ.16 ஆயிரமும், தொடரும் பட்சத்தில் ரூ.18 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 செப்., 29.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு