செயற்கை மழைப் பொழிவு – டெல்லி அரசு திட்டம்! – AanthaiReporter.Com

செயற்கை மழைப் பொழிவு – டெல்லி அரசு திட்டம்!

ஏதேதோ சில பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் டெல்லியில் காற்று மாசு டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையில் நீடிக்கிறது. எனவே காற்று மாசை குறைக்க இந்த வாரம் செயற்கை மழை உருவாக்க கெஜ்ரிவால் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய தலைவர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச் சியாக இந்த மாதம் காற்று மாசு அதிகரித்ததால் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது. தற்போது டெல்லியின் காற்று தரம் குறியீடு 358 ஆக பதிவாகியுள்ளது. 301 முதல் 400 வரையிலான குறியீடு காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதை குறிக்கும். காற்றின் வேகம் மற்றும் திசை, காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் ஆகியவை நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்று, மழை போன்ற வானிலை நிலவரமும், அங்கு மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை. இந்நிலையில் அங்கு காற்று மாசை கட்டுப்படுத்த இந்த வாரம் செயற்கை மேகங்களை உருவாக்கி மழை பொழிவிக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. வானிலை மாற்றங்கள் சாதகமாக இருக்கும்பட்சத்தில் இந்த வாரம் செயற்கை மழை உருவாக்குவதற்கான பணிகள் துவங்கும். வானிலை சாதகமானதாக இல்லை என்றால் அடுத்த வாரம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்க்காக சில்வர் ஐயோடைட், டிரை ஐஸ், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து விமானம் மூலமாக மேகங்களில் தூவப்படும். அதன் காராணமாக மேகங்களின் அடர்த்தி அதிகரித்து மழை பொழிவதற்கான சாதகமான சூழல் உருவாக்கப்படும். இதுவே செயற்கை மழை உருவாக்கும் வழிமுறை. இந்த திட்டத்தை செயல்படுத்த டில்லி வானிலை ஆராய்ச்சியாளர்கள் வானிலையை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள்.