ஏர் இந்தியா-வில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com

ஏர் இந்தியா-வில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏர் இந்தியா பழமையானது. இதில் கேபின்க்ரூ பிரிவில் 86 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த இடங்கள் குறிப் பிட்ட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலானது.

வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 22 வயது உடையவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் 5 வருடங்களும், ஓ.பி.சி., பிரிவினராக இருந்தால் 3 வருடங்களும் அதிகபட்ச வயதில் சலுகைகள் உள்ளது.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதர தேவை : விண்ணப்பதாரர்கள் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.

உடல் தகுதி: ஆண் விண்ணப்ப தாரர்கள் குறைந்த பட்ச உயரம் 165 செ.மீ.,யும், பெண் விண்ணப்ப தாரர்கள் குறைந்தபட்ச உயரம் 157.5 செ.மீ.,யும் கொண்டிருக்க வேண்டும். இது தவிர குறைந்த பட்ச பி.எம்.ஐ., கண்பார்வை, எடை, கண்ணாடி அணியாமலிருத்தல், நிறக் குறைபாடு இல்லாமல் இருத்தல், போன்ற தகுதிகளும் தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியலாம்.

விண்ணப்பக் கட்டணம் 
: இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.500/ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் 
: 2019 ஜன., 1.

விபரங்களுக்குwww.airindia.in/writereaddata/Portal/career/671_1_ADVTwebCABINCREWDecember2018.pdf