பிரக்ஸிட் – ஒரு தெளிந்த ஆய்வு – ஏன்? எதற்கு?? எப்படி??? என்னாகும்!

பிரக்ஸிட்  – ஒரு தெளிந்த ஆய்வு – ஏன்? எதற்கு?? எப்படி??? என்னாகும்!

28 மெம்பர் ஸ்டேட்கள், அதில் 19 ஸ்டேட்கள் ( நாடுகள்) ஒரே கரென்ஸி மற்றும் 500 மில்லியன் ஜனத்தொகை தான் ஐரோப்பிய யூனியன். 1975 முதல் ஒரு சாம்ராஜ்யமாக 9 ஸ்டேட் மெம்பர்களில் ஆரம்பித்து போன வாரம் வரை விரிந்து கிடந்த ஐரோப்பிய யூனியனின் பவர் இனி மேல் பிரஷல்ஸ் பாராளுமன்றத்தை நோக்கி செல்கிறது. இது 2008 ஆம் ஆண்டு கடுமையான உலக பொருளாதார மந்தத்தை பிரிட்டன் சமாளித்த வகையில் ஐரோப்பிய யூனியனுக்கு பெரிய பங்கு உண்டு. அப்படி பலம் பொருந்தி இருந்தும் ஏன் இந்த பிரிவு என்றால்……?!

ravi june 27

தன் நாட்டின் வளம், தன் நாட்டின் மதிப்பை குறைக்கும் வண்ணம் அனேக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனுக்கு வந்த வண்ணம் இருந்தது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் பிரிட்டன் அரசியல் இன்னும் ஒரு காரணம் கூட. ஆரம்ப காலம் முதல் போன வருடம் வரை பிரிட்டனின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வேலைகளுக்கு போலந்தில் இருந்து பாலீஷ் எனப்படும் குடிமகன்கல் பிரிட்டனில் சின்ன சின்ன வேலை முதல் பெரிய கான்டிரக்ட்களின் பணியாளர்கள் இவர்கள் இல்லாம்ல் நடக்கவே நடக்காது என்ற நிலைமை வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அதிக ஐரோப்பிய யூனியன்களில் இருந்து பாலீஷ் அல்லாத வேறு இனத்தவர் பிரிட்டனை நோக்கி படையெடுக்க அப்போது தான் புரிந்தது பிரிட்டனுக்கு பல நாடுகளில் இருட்ன்ஹு உள் நாட்டு பிரச்சினை காரணமாக அகதிகளாய் ஐரோப்பிய யூனியனின் சில நாடுகளுக்கு புகுந்து ஒரு கட்டத்தில் அந்த வேறு நாட்டவர், அகதி என்ற நிலையை கொஞ்ச நாட்களில் மாற்றி ஐரோப்பிய யூனியனின் குடிமகன்களாய் பிரிட்டனில் தொடர்ந்து வந்தது தான் முக்கிய காரணம். இந்த இமிகிரேஷனுக்கு சப்போர்ட் செய்த பிரிட்டனின் எம் பி ஜோ காக்ஸ் இரண்டு வாரத்துக்கு முன்பு குத்தி கொன்றதும் இதன் ஆதாரம்.

சாதகங்கள் – பிரிட்டனுக்கு சுய அதிகாரம், சொந்த நாட்டின் சட்ட திட்டங்கள். இது வரை ஐரோப்பிய யூனியனின் சில சட்ட திட்டங்களை பிரிட்டனும் கொண்டிருந்தது. வர்த்தகத்தில் நான் யாருடன் வணிகம் செய்ய வேண்டும், என்ன விலை விற்க வேண்டும் என்ன தரம் இருக்க வேண்டும் என்பதை இனிமேல் பிரிட்டன் நாட்டு மக்கள் மற்றும் அந்த நாட்டின் சட்டம் முடிவு செய்யும். இமிகிரேஷன் விஷயத்தில் இனிமேல் ஐரோப்பிய யூனியன் இன்னொரு அன்னிய நாடாக பார்க்க படும். ஐரோப்பிய நாடுகளின் குடுமகன்கள் என்ற சிறப்பு சலுகை ஏர்போர்ட் இமிகிரேஷனில் இருந்து இஞ்சி மொறப்பா விற்கும் பல்கோரியர்கள் வரை மாற்றப்படும். ஐரோப்பிய நாடுகளுடன் உலக வர்த்தகத்தில் போட்டி போட முடியும். ஏன் ஐரோப்பிய் நாட்டுக்கு செய்யும் ஏற்றுமதி கூட யூரோவாக இல்லாமல் பவுன்டாக அல்லது டாலராக மாற்றி கொள்ள முடியும்.

பாதகங்கள் – உலகத்தின் அதி பெரிய நஷ்டமான பங்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டார்களின் பணம் சுமார் 2 ட்ரியல்லனுக்கு மேல் நஷ்டம் பெறும். பல வங்கிகள் பிரிட்டனை விட்டு விலக அனைத்து வேலைகளையும் தொடங்கி விட்டது. இது வரை ஐரோப்பிய யூனியன்களில் மொத்த பிரதினதியாய் இருந்த ஃபைனன்ஸியல் ஹவுஸ்கள் இனிமேல் பாரீஸ், பிராங்க்ஃபர்ட் அல்லது டப்ளின் நகரங்களை மையமாக கொண்டு செயல்படும். டாடா மோட்டார்ஸ் மற்றூம்மே 30,000 கோடி ரூபாயை ஒரே நாளில் இழந்த மாதிரி மல்டி ஐரோப்பிய வணிக நிறுவனங்களுக்கு சம்மட்டி அடி. ஐயர்லாந்து, மால்டா, சைப்ரஸ், லக்ஸம்பர்க் நாட்டின் வர்த்தகம் மற்றும் நிதி நிலமை கிரீஸ் நாட்டை விட அதள பாதாளத்துக்கு செல்லும்.ஸ்விஸ்ஸின் பெரும்பணம் பிரிட்டனில் உள்ளதால் அந்த நாடும் அதிகம் பாதிக்கபடும். முக்கியமாக பிரிட்டன் இந்த பிரிவை ஏற்படுத்தி உலக நாடுகளின் வர்த்தகத்திர்க்கு ஆப்பு வைத்தாலும்
அந்த் நாடு மட்டும் அதிகம் பாதிக்கபடாது இன்னும் கேட்டால் உதாரனத்திர்க்கு வாரா வாரம் 350 மில்லிய பவுன்டுகளை ஐரோப்பிய யூனியனுக்கு கப்பம் கட்டும் விஷயங்கள் மாதிரி அதிக பண விரயம் பாதுகாக்கபட்டு அது அனைத்து பிரிட்டனின் மக்களுக்கு சென்று சேரும்.

இவ்வளவு இருந்து பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த தேர்தலில் 51/49ன் னு வெறும் இரண்டு சதவிகித வித்தியாசத்தில் ஜெயிக்க காரணம் அந்த 51% சதவிகித பேர் பல தலைமுறை பிரிட்டனியர்கள் மீதி பேர் முதல் அல்லது இரண்டாம் ஜென்ரேஷன் பிரிட்டானியர்கள் முன்னாள் ஐரோப்பிய் நாட்டி குடிமகன்கள் என்பதாலே. தன் நாடு தன் பணம் தன் வளம் என்ற சுய நலம் அகதிகளுக்கு பெரும் பிரச்சினையானது. ஆனாலும் ஐரோப்பிய யூனியன் இந்த சிரியா அகதிகள் மற்றூம் தொடர் வெடிகுண்டு வெடிப்புகள் பிரிட்டனை இந்த பிரக்ஸிட் செய்ய ஒன் ஆஃப் தி காரணங்களும் கூட. பல ஐரோப்பிய ஸ்டேட் மெம்பர்கள் தனி நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை.

error: Content is protected !!