அமேசான் காட்டுத் தீயை அணைக்க ஜி 7 நாடுகளின் உதவியை மறுத்தது பிரான்ஸ்! – AanthaiReporter.Com

அமேசான் காட்டுத் தீயை அணைக்க ஜி 7 நாடுகளின் உதவியை மறுத்தது பிரான்ஸ்!

உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசானின் பெரும்பகுதி பிரேசிலில் அமைந்துள்ளது. உலக வெப்பமாதலைத் தடுப்பதில் இந்த மழைக்காடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் பிரேசிலில் சுமார் 73,000 காட்டுத் தீ சம்பவங்கள் நேரிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது அதிகப்பட்ச எண்ணிக்கையாகும்.

இந்த காட்டுத் தீ சம்பவங்களால் ஏற்பட்ட சேதங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.எனினும், காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமண்டலத்தில் சாவ்பாலோ உள்ளிட்ட பல்வேறு பிரேசில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி உள்ளது. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்தன. தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது. இந்த அறிவிப்பை பிரேசில் அரசு நிராகரித்துள்ளது.