இந்தியா & சீன குடிமக்கள் பிரேசில் செல்ல விசா இனி தேவையில்லை!

இந்தியா & சீன குடிமக்கள் பிரேசில் செல்ல விசா இனி தேவையில்லை!

சர்வதேச அளவில் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான பிரேசிலுக்கு சுற்றுலா பயணிகளாகவோ அல்லது வணிக ரீதியிலான வேலைகளுக்காகவோ இந்திய மற்றும் சீன நாட்டில் இருந்து பிரேசில் (Brazil) வர விரும்பினால், அதற்கு விசா (Visa) தேவையில்லை என அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ (Jair Bolsonaro) அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்து தீவிர வலதுசாரி அரசியல்வாதியான போல்ச னாரோ, சில வளர்ந்த நாடுகளில் இருந்து பிரேசில் வர விசா தேவையில்லை என்ற கொள்கையை உருவாக்கி, அதை நடைமுறைபடுத்தினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் பிரேசிலுக்கு வர விசா தேவைகளை முடிவுக்கு கொண்டுவந்தது.

இதுகுறித்து பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ நேற்று (வியாழக்கிழமை) தென் அமெரிக்க நாடு, சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் அல்லது வணிகர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு விசாவைப் பெறுவதற்கான தேவையை கைவிடுவதாகக் கூறினார்.

இனி இந்தியாவில் இருந்து பிரேசில் நாட்டுக்கு சுற்றுலா செல்லவோ அல்லது தொழில் தொடர்பாக வர்த்தகம் செய்யவோ செல்ல நேரிட்டால் விசா தேவையில்லை என்பதும் ஆனால் இதுவரை எந்த ஒரு வளர்ந்த நாடுகளும், பிரேசில் நாட்டில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் தங்கள் நாடுகளுக்கு வந்து போகலாம் என தங்கள் குடியுரிமைச் சட்டங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!