வேலம்மாள் போதி பள்ளியில் பிரமாண்ட விஞ்ஞான் விழா…!

வேலம்மாள் போதி பள்ளியில் பிரமாண்ட விஞ்ஞான் விழா…!
சென்னை கொளப்பாக்கம்  வேலம்மாள் போதி பள்ளியில் முதலாம் ஆண்டு விஞ்ஞான் 2016 என்னும் தலைப்பில் அறிவியல் போட்டிகள் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது இதில் 80 க்குள் மேற்ப்பட்ட பள்ளிகளிலுருந்து 1500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
school oct 19
இந்த விழாவில் 17 அறிவியல் போட்டிகள் 6 நிலைகளில் வகுப்பு ரீதியாக மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் தாங்கள் தயாரித்த அறிவியல் மாதிரிகளை கொண்டு வந்து விளக்கினார்கள்.
விழாவில் சிறப்பு அம்சமாக மாதிரி ராக்கெட் தயார் செய்து அதை இயக்கிக்காட்டியது மாணவர்களுக்கு பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. இது போன்ற அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை பள்ளி மாணவர்களுக்கு இந்த வயதிலேயே காண்பிப்பதும், அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க ஊக்கம் தருவதும் பெற்றோர்களுக்கு மகிழ்வைத்தந்தது.
விழாவில் டாக்டர் சாமுவேல் ஜான்சன், பொன்னேரி வேலம்மாள் இயக்குனர் MVM சசிக்குமார், திருமதி கீதாஞ்சலி மற்றும் வேலம்மாள் கல்வி குழுமத்தின் கல்வியாளர்களும், பெற்றோர்கள் , ஊடக நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts

error: Content is protected !!